தி லயன் கிங் தமிழ் டப்பிங்கில் சிம்பாவாகக் குரல் கொடுக்கும் சித்தார்த் பேசும் டப்பிங் காட்சியும், படத்தில் அவரது குரலோடு வரும் காட்சியும் டீசராக வெளியாகியுள்ளது.
1994ஆம் ஆண்டு வெளிவந்த அனிமேஷன் கிளாஸிக்கான தி லயன் கிங், லைவ் ஆக்ஷன் தொழில்நுட்பத்தில் இக்கால ரசிகர்களுக்கு ஏற்ப உருவாகியுள்ளது. ஜூலை 19ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இரு தினங்களுக்கு (ஜூலை 9) முன் நடந்த உலக பிரீமியர் காட்சியில் மகத்தான வரவேற்பைப் பெற்றிருக்கிறது தி லயன் கிங். இப்போதே தி லயன் கிங் படத்தின் வெற்றியை ஆருடம் கூறத் தொடங்கியுள்ளனர் விமர்சகர்கள். 1994ஆம் ஆண்டு வெளியான தி லயன் கிங், சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 19ஆம் தேதி வெளியாகும் தி லயன் கிங் படத்தின் தமிழ் டப்பிங்கில் தந்தை முஃபாசாவுக்கு பி.ரவிசங்கர் குரல் கொடுக்கிறார், சிம்பாவுக்கு சித்தார்த், வில்லன் ஸ்காருக்கு அர்விந்த் சாமி, நலாவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ், ஜசூ என்ற பறவைக்கு மனோ பாலா, குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான டிமோன் கதாபாத்திரத்துக்கு சிங்கம் புலி, பும்பாவுக்கு ரோபோ சங்கர் உள்ளிட்டோர் குரல் கொடுக்கின்றனர்.
சித்தார்த் சிம்பாவுக்காக டப்பிங் பேசிய காட்சியும் படத்தில் அவரது குரலோடு வரும் காட்சியும் டீசராக வெளியாகியுள்ளது. இதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சித்தார்த். ‘முடிவு உன்னோடது ஸ்கார். வழி விடு, இல்ல மோதிப் பாரு’ எனப் படத்தின் முக்கியமான கட்டத்தில் சிம்பா, ஸ்காரிடம் சவால் விடும் காட்சிக்காக சித்தார்த் பேசிய வசனம் டீசரின் வெளியாகியுள்ளது.
அவெஞ்சர்ஸ்: தி எண்ட் கேம் படத்தில் அயர்ன் மேன் கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதியின் டப்பிங் ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்தது. இந்த நிலையில், சித்தார்த்தை சிம்பாவாக தமிழ் ரசிகர்கள் ஏற்பார்களா என ஜூலை 19ஆம் தேதி தெரியவரும்.
[தி லயன் கிங் டீசர்](https://twitter.com/i/status/1148466606839746561)
**
மேலும் படிக்க
**
**[வைகோவுக்கு இன்னொரு செக்!](https://minnambalam.com/k/2019/07/10/78)**
**[ராஜ்யசபா தேர்தல் நடக்காது!](https://minnambalam.com/k/2019/07/10/51)**
**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!](https://minnambalam.com/k/2019/07/10/80)**
**[பதவி விலகத் தயார்: அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/10/54)**
**[இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!](https://minnambalam.com/k/2019/07/09/22)**
�,”