அரசியலுக்கு வந்தபின் இனித் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என அறிவித்த கமல் தனது அடுத்தப் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியபின் கமல் நடிப்பில் விஸ்வரூபம் 2 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. ஆனால் அதற்கு முன்பாகவே, ‘ஏற்கெனவே ஒத்துக்கொண்ட படங்களைத் தவிர இனி வேறு எந்தப் படங்களிலும் நடிக்கப்போவதில்லை’ என கமல் கூறியிருந்தார். எனவே சபாஷ் நாயுடு படம் பாதியிலேயே நின்ற நிலையில், அந்தப் படமும் இந்தியன் 2 திரைப்படமும் மட்டும் அவர் நடிப்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கின. ஆனால் சில நாள்களிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் லைகா நிறுவனம் தயாரிப்பிலிருந்து விலகுவதாக செய்திகள் வெளியாகின. தற்போது அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தை தவிர்த்து கமல் நடிப்பில் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படம் உருவாகவுள்ளதாக ஏற்கெனவே பேசப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் பணிகளை கமல் முன்னெடுத்துவருகிறார்.
அதன் ஒருகட்டமாக நேற்று இசையமைப்பாளர் ஏ,ஆர்.ரஹ்மானைச் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து இருவரும் தங்கள் டிவிட்டர் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
கமல் அரசியலில் இறங்குவதற்கு முன்பாகவே இந்த தலைப்பு வைக்கப்பட்டிருப்பினும் நிச்சயம் இப்படம் அவரது அரசியலை பேசும்விதமாகவே உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியையே தனது கட்சியை, தனது அரசியலை கொண்டு செல்லும் ஊடகமாக கமல் பயன்படுத்திவருகிறார் என்று சமூகவலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் இந்தப் படமும் அத்தகைய விமர்சனத்தை சந்திக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
**
மேலும் படிக்க
**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[ நியூசிலாந்துக்கு ‘விதி’ செய்த ‘சதி’!](https://minnambalam.com/k/2019/07/15/46)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை மாசெக்கள் தேடி வரவேண்டும்- அறிவாலயத்தின் மெசேஜ் !](https://minnambalam.com/k/2019/07/15/72)**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
�,”