சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸாருக்கும் நக்சல்களுக்கும் இடையில் சமீபத்தில் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கடந்த மாதம் 25ஆம் தேதி நக்சல் அமைப்பின் இரு வீரர்கள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் சுக்மா தாக்குதலுக்குத் தொடர்பானவர்கள் என சந்தேகிக்கப்படும் 19 நக்சல்களை, சத்தீஸ்கர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரும், இதற்கு முன் பல்வேறு சதித் திட்டங்களில் பங்கேற்றவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.�,
+1
+1
+1
+1
+1
+1
+1