நாடு முழுவதும் இன்று (நவம்பர் 14) குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும்விதமாக, மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவி உருவாக்கிய ஓவியத்தைக் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுளாக வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 130ஆவது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் விதமாகக் கூகுள் நிறுவனம் இந்தச் சிறப்பு டூடுளை இன்று வெளியிட்டுள்ளது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14, குழந்தைகள் தினமாக நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் பள்ளி மாணவர்களின் சிந்தனை மற்றும் படைப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் சமீபத்தில் டூடுள் ஃபார் கூகுள்” என்ற போட்டியை நடத்தியது. நாடு முழுவதிலும் இருந்து 75,000க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். இவர்களில் மும்பையைச் சேர்ந்த பின்கள் ராகுல் மோர் என்ற மாணவி வரைந்த ஓவியம்தான் இன்றைய தினத்தில் கூகுள் டூடுளாக வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம்.
இந்த டூடுளில், ஒரு மாணவி விண்வெளியை டெலஸ்கோப்பில் பார்ப்பது போன்றும், கூகுள் என்ற வார்த்தையில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் விண்வெளி சார்ந்தும் இடம்பெற்றுள்ளது.�,”