mகிச்சன் கீர்த்தனா: பாசிப்பருப்பு பர்ஃபி

Published On:

| By Balaji

சன்டே ஸ்பெஷல்!

அரக்கப்பரக்கச் சமைக்காமல், குடும்பமே ஒன்றுகூடி உணவு தயாரித்தலை ஒரு கொண்டாட்டமாகச் செய்ய ஒருநாள்… ஞாயிறு! பாரம்பரியமும் நவீனமும் கலந்து, அனைவருக்கும் பிடிக்கும் வகையில் சண்டே ஸ்பெஷல் விருந்துக்கு உதவும் இந்தப் பாசிப்பருப்பு பர்ஃபி.

**என்ன தேவை?**

பாசிப்பருப்பு – ஒரு கப்

பால், சர்க்கரை – தலா 2 கப்

இனிப்பு கோவா – அரை கப்

ஏலக்காய்த் தூள், வெள்ளித் தாள், பாதாம் அல்லது பிஸ்தா (சீவவும்) – தேவையான அளவு

நெய் – முக்கால் கப்

முந்திரி (உடைத்தது) – கால் கப்

**எப்படிச் செய்வது?**

கோவாவைத் துருவவும். பாசிப்பருப்பை வாசனை வரும்வரை வறுக்கவும். ஆறியதும் பாதியளவு பாலில் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, பருப்பை பாலுடன் சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். மீதியுள்ள பாலைச் சுண்டக் காய்ச்சவும். அடிகனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி, பருப்பு விழுது சேர்த்து, கைவிடாமல் நன்கு கிளறவும்.

நன்கு சேர்ந்து வரும்போது துருவிய கோவா, மீதியுள்ள பாலை சேர்க்கவும். இதனுடன் சர்க்கரைப் பாகு சேர்க்கவும் (சர்க்கரையைப் பாகு எடுத்து, பாகு தேன் மாதிரி வரும்போது வடித்து, கலவையில் சேர்க்கவும்). பிறகு முந்திரி, ஏலக்காய்த் தூள் சேர்க்கவும்.

கைவிடாமல் கிளறி, சுருண்டு வரும்போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி பிஸ்தா அல்லது பாதாம் தூவி லேசாக அழுத்தி வெள்ளித் தாள் ஒட்டி, நன்கு ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

**என்ன பலன்?**

பாசிப்பருப்பு அதிக புரதம், வைட்டமின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தது. வீட்டிலுள்ளவர்களுக்கு மட்டுமல்ல; விருந்தினர்களின் விரும்பும் பர்ஃபியாக இது அமையும்.

[நேற்றைய ரெசிப்பி: மசாலா மோர்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/2)

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)

**

.

**

[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)

**

.

**

[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share