mகிச்சன் கீர்த்தனா: தர்பூசணி – இஞ்சி பானம்

Published On:

| By admin

வெயில் காலத்தில் அனைவரையும் பாடாகப்படுத்தும் பிரச்சினைகளில் முக்கியமானது சருமப் பிரச்சினை. தர்பூசணியிலிருக்கும் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் (Beta-Carotene) இரண்டும் ஆன்டிஆக்ஸிடன்ட்களாகச் செயல்படுகின்றன. இவை சருமத்தில் கொலாஜன் (Collagen) உற்பத்தியை அதிகரிக்கும். இதிலுள்ள குளூட்டாதியோன் (Glutathione) சருமப் பராமரிப்புக்கும், நன்றாக முடி வளர்வதற்கும் உதவும். இந்த தர்பூசணி – இஞ்சி பானம் உடலில் ஏற்படும் சுருக்கங்களைச் சரிசெய்யவும் செரிமான பிரச்சினைகளைச் சீராக்கவும் உதவும்.
**என்ன தேவை?**
தோல், விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள் – ஒரு கப்
தோல் நீக்கி, மெல்லியதாக சீவிய இஞ்சித் துண்டுகள் – 5
எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன்
புதினா இலைகள் – 10
நறுக்கிய எலுமிச்சை வில்லைகள் – 2
ஐஸ்கட்டிகள் – தேவையான அளவு
உப்பு – சிறிதளவு
**எப்படிச் செய்வது?**
தர்பூசணித் துண்டுகள், இஞ்சித் துண்டுகள், உப்பு, சர்க்கரை ஆகியவற்றுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, மிக்ஸியில் அடிக்கவும். கிளாஸ்களில் 2, 3 ஐஸ்கட்டிகள் போட்டு, தர்பூசணி ஜூஸை ஊற்றி… புதினா இலைகள், எலுமிச்சை வில்லை கொண்டு அலங்கரிக்கவும்.
**[நேற்றைய ரெசிப்பி: தர்பூசணி குல்ஃபி](https://minnambalam.com/public/2022/04/07/1/watermelon-kulfi)**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share