mகர்நாடக பாஜக தலைவராக எடியூரப்பா நியமனம்

Published On:

| By Balaji

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எடியூரப்பாமீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால், பாஜக-வில் அவரை ஓரம்கட்டி வைத்திருந்தனர். இதனால் அவர் பாஜக-விலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார். கடந்த, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையும் சந்தித்தார். அந்தத் தேர்தலில் பாஜக-வும், எடியூரப்பா கட்சியும் படுதோல்வி அடைந்தது. காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. தேர்தலுக்குப் பின்னர், எடியூரப்பா மீண்டும் பாஜக-வில் இணைந்தார். கட்சியில் மீண்டும் அவர் செல்வாக்குள்ள தலைவராக வலம்வரத் தொடங்கினார். இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தேசியத் தலைமை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கர்நாடக மாநில பாஜக தலைவராக எடியூரப்பாவையும், உத்தரப்பிரதேச மாநிலத் தலைவராக கேஷவ் பிரசாத் மவுரியாவும் நியமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share