Mஓஎன்ஜிசி குழாய்: கண்டன குரல்!

Published On:

| By Balaji

விவசாய பயிர்களை அழித்து ஓஎன்ஜிசி குழாய் அமைத்துவருவதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறையில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி ஓஎன்ஜிசி நிறுவனம் எரிவாயு குழாய்களை அமைத்துள்ளது. இதுகுறித்து நேற்று மின்னம்பலத்தில் [செய்தி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/60) வெளியிட்டிருந்தோம். ஓஎன்ஜிசியின் நடவடிக்கைகளை எதிர்த்து இன்று இரண்டாவது நாளாக மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகப்பட்டினம் மாவட்டம் மாதானத்திலிருந்து நரிமணம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்வதற்காக விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி குறுவை நடவு செய்யப்பட்டுள்ள வயல்களில் காவல்துறை துணையுடன் குழாய் பாதை அமைக்கும் பணிகளை கெயில்-ஓஎன்ஜிசி நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. விவசாயிகளின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்காமல் அத்துமீறி வயலில் நுழைந்து பயிர்களை அழித்தது, குழாய் பாதை அமைத்தது கண்டிக்கத்தக்கது.

குழாய் பாதை முழுக்க முழுக்க விளைநிலங்களில் அமைக்கப்படுகிறது. அங்கு நடவு செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிர்களை அழித்துவிட்டு குழாய் பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடவு நட்ட பயிர்களை அழிக்க வேண்டாம் என்று விவசாயிகள் கெஞ்சினாலும் போராடினாலும் அவற்றை பற்றி கவலைப்படாமல் ராட்சத இயந்திரங்கள் மூலம் பணிகள் தொடர்கின்றன. மாதானம் முதல் மேமாத்தூர் வரை கெயில் எண்ணெய் குழாய் பாதை அமைப்பதால் அப்பாதை நெடுகிலும் உள்ள 30,000 ஏக்கருக்கும் மேலான விளைநிலங்கள் பாதிக்கப்படும். இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.

ஏற்கெனவே காவிரி பாசன மாவட்டங்களில் 5,000 சதுர கிமீ பரப்பளவில் 6 ஹைட்ரோகார்பன் திட்டங்கள், கடலூர், நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57,345 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தி பெட்ரோகெமிக்கல் முதலீட்டு மண்டலம், 600 ஏக்கர் பரப்பளவில் நரிமணம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் என விவசாயத்தை அழிக்கும் மத்திய அரசு, எஞ்சிய நிலங்களையும் சீரழிக்க குழாய்ப்பாதை திட்டத்தை செயல்படுத்த துடிக்கிறது.

கச்சா எண்ணெய்யை கொண்டு செல்வதற்காக மாதானம் முதல் மேமாத்தூர் வரை குழாய்ப்பாதை அமைப்பது விவசாயத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பையும், பாதிப்பையும் ஏற்படுத்திவிடும். இனியாவது விழித்துக்கொண்டு இத்திட்டத்தை உடனடியாக கைவிட மத்திய அரசு நிறுவனங்கள் முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)

**

.

**

[இன அழிப்புப் போரில் இறந்தோருக்கு அஞ்சலி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/24)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share