நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் மான்ஸ்டர் படத்தின் டீசர் நேற்று (மே 2) மாலை வெளியாகியுள்ளது.
எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் மான்ஸ்டர். மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் படங்களில் ஈர்த்த நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
படப்பிடிப்பு முடிந்து மான்ஸ்டரின் பின் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
எஸ்.ஜே.சூர்யா எலிக்குப் பயந்து ஓடி ஒளியும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காமெடி படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குழந்தைகளை ஈர்க்கும் வகையில் உருவாகியிருக்கும் இந்தப் படம், கோடை விடுமுறையைக் குறிவைத்து வரும் மே 17ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தைத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு தயாரிப்பில், பொடென்ஷியல் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.
[மான்ஸ்டர் டீசர்](https://www.youtube.com/watch?v=kqQHZ2Ni5jA&feature=youtu.be)�,