பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு லக்னோவின் எகானா மைதானம் தனது முதல் சர்வதேச போட்டியை நடத்தத் தயாராகி வருகிறது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள், 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடறில் பங்கேற்கவுள்ளது. இந்தத் தொடருக்கான அட்டவணை, மைதானங்கள் உள்ளிட்ட திட்ட வரைவுகளை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. இதில் இரண்டாவது டி20 போட்டியை உத்தர பிரதேசத்தின் வடக்கு பகுதிகளான கான்பூர் மற்றும் லக்னோவில் நடத்துவது தொடர்பாக கடந்த ஆறு நாட்களாக பேச்சுவார்த்தை நடந்துவந்தது. இதன் முடிவில் தற்போது இந்தப் போட்டி லக்னோவின் எகானா மைதானத்தில் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
50,000 பேர் உட்கார்ந்து போட்டியை ரசிக்கும் வசதி படைத்த இந்த எகானா மைதானம் 2016ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. 3 ரஞ்சி கோப்பை போட்டிகள், 2 துலீப் கோப்பை போட்டிகள் உட்பட இந்த மைதானத்தில் இதுவரை 5 உள்ளூர் போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன.
**டெஸ்ட் தொடர் அட்டவணை**
முதல் டெஸ்ட்: அக்டோபர் 4-8; ராஜ்கோட்
இரண்டாவது டெஸ்ட்: அக்டோபர் 12-16; ஹைதராபாத்
**ஒருநாள் தொடர் அட்டவணை**
முதல் ஒருநாள் போட்டி: அக்டோபர் 21, கவுஹாத்தி
இரண்டாவது ஒருநாள் போட்டி: அக்டோபர் 24, இந்தூர்
மூன்றாவது ஒருநாள் போட்டி: அக்டோபர் 27, புனே
நான்காவது ஒருநாள் போட்டி: அக்டோபர் 29, மும்பை
ஐந்தாவது ஒருநாள் போட்டி: நவம்பர் 1, திருவனந்தபுரம்
**ஒருநாள் தொடர் அட்டவணை**
முதல் டி20: நவம்பர் 4, கொல்கத்தா
இரண்டாவது டி20: நவம்பர் 6, லக்னோ
மூன்றாவது டி20: நவம்பர் 11, சென்னை.
**இந்த தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்**
ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), சுனில் அம்ப்ரிஸ், தேவேந்திர பிஷூ, க்ரையாக் பிராத்வெய்ட், ரோஸ்டன் சேஷ், ஷேன் டவுரிச், ஷானான் கேப்ரியல், ஜாமர் ஹேமில்டன், ஷிம்ரன் ஹெட்மெர், ஷாய் ஹோப், அல்ஸாரி ஜோசப், கீமோ பால், கெய்ரன் பவல், கீமர் ரோச், ஜோமல் வாரிக்கேன்.�,