mஇந்தியாவிலும் வெளியான ரெட்மி கே20 சீரிஸ்!

Published On:

| By Balaji

ரெட்மி கே20, ரெட்மி கே20 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் இன்று (ஜூலை 17) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. ரெட்மி கே20 ஸ்மார்ட்போனுக்கு ஆரம்பவிலையாக ரூ.21,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, மூன்று பின்புற கேமராக்கள், செயற்கை நுண்ணறிவு அம்சம், கண்ணாடி வடிவமைப்பு, ஆமோலெட் தொடுதிரை, 4000mAh திறன் பேட்டரி உள்ளிட்டவை சிறப்பம்சங்களாகும்.

ஜூலை 22ஆம் தேதி முதல் இவ்விரண்டு ஸ்மார்ட்போன்களும் விற்பனைக்கு வருகின்றன. ரெட்மி கே 20 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்ட்ராகன் 730 ப்ராசஸாரும்ரெட்மி கே20 ப்ரோவில் ஸ்னாப்ட்ராகன் 855 ப்ராசஸாரும் பொருத்தப்பட்டுள்ளன. பாப் அப் செல்ஃபி கேமராக்கள் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கின்றன. 6GB RAM / 64GB ஸ்டோரேஜ் கே20 மாடலுக்கு ரூ.21,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8GB RAM/64GB ஸ்டோரேஜ் கே20 மாடலுக்கு ரூ.23,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

6GB RAM / 128GB ஸ்டோரேஜ் கே20 ப்ரோ மாடலுக்கு ரூ.30,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8GB RAM / 128GB ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ.35,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களுமே Glacier Blue, Carbon Fiber Black and Flame Red ஆகிய மூன்று நிறங்களில் வெளியாகின்றன. ரெட்மி கே20 சீரிஸ் போன்கள் அனைத்துமே இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share