சென்னையில் உள்ள பண்டைய இசைக் கருவிகள் அருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்ற இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
1957ஆம் ஆண்டு சென்னை அண்ணா சாலையில் தொடங்கப்பட்டது சங்கீத வித்யாலயா. அரிய, பழமையான இசைக்கருவிகளின் அருங்காட்சியமாக இது செயல்பட்டு வருகிறது. சங்கீத வித்யாலயாவை முன்னாள் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் தொடங்கி வைத்தார். இதனை நிறுவியவர் பேராசிரியர் சாம்பமூர்த்தி. பழமையான கம்பிக்கருவியான யாழ் உட்படப் பல்வேறு இசைக்கருவிகள் இங்குள்ளன.
மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருங்காட்சியகத்தில் பழமையான இசைக்கருவிகளின் மாதிரிகளை உருவாக்குவது, அவற்றைப் பாதுகாப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆசியாவிலே சென்னையில் மட்டும் தான் இசைக் கருவிகளுக்கான அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்ற கைவினைப் பொருட்கள் வளர்ச்சி ஆணையம் முயற்சித்து வருகிறது. இதனை எதிர்த்து, சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இன்று (மே 30) இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், பி.டி.ஆஷா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்குப் பதிலளிக்க மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, இசைக் கருவிகள் அருங்காட்சியத்தை டெல்லிக்கு மாற்றுவதில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டனர் நீதிபதிகள். இந்த வழக்கு வரும் ஜூன் 10ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[மோடி அமைச்சரவையில் தமிழகம் இடம் பெறுமா?](https://minnambalam.com/k/2019/05/30/29)
**
.
**
[முதல்வர் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்பு: முழு ரிப்போர்ட்!](https://minnambalam.com/k/2019/05/30/18)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு இளைஞரணி: ஸ்டாலினுக்கு நெருக்கடி!](https://minnambalam.com/k/2019/05/29/85)
**
.
**
[என்ன செய்திருந்தால் ராகுல் வென்றிருப்பார்!?](https://minnambalam.com/k/2019/05/30/23)
**
.
**
[துரைமுருகனுக்கு என்னாச்சு?](https://minnambalam.com/k/2019/05/29/59)
**
.
.
�,”