mஅரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு!

Published On:

| By Balaji

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகித அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்போது, அதனைப் பின்பற்றி தமிழக அரசு ஊழியர்களுக்கு உயர்வு அளிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. அதன்பின்னர், மார்ச் மாதத்தில் மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. உடனடியாகத் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததால், தமிழக அரசு அகவிலைப்படி உயர்வு குறித்த தகவல் எதையும் வெளியிடவில்லை என்று கூறப்பட்டது.

அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூளூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில், இன்று (மே 20) அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி குறித்த அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. இதன்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வானது கடந்த ஜனவரி 1ஆம் தேதி முன்தேதியிட்டு வழங்கப்படும். இதனால் அகவிலைப்படியானது 12 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை ரொக்கமாக வழங்க வேண்டுமென்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)

**

.

**

[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)

**

.

**

[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)

**

.

**

[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)

**

.

**

[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)

**

.

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share