mஅமெரிக்காவில் குவியும் இந்திய இறால்கள்!

Published On:

| By Balaji

அமெரிக்க நாட்டுக்கான இந்திய இறால் ஏற்றுமதி சென்ற ஆண்டில் 15.6 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

2018ஆம் ஆண்டில் அமெரிக்கா மொத்தம் 6,75,723 டன் அளவிலான இறால்களை பல்வேறு நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்துள்ளது. அதில் இந்தியாவிடமிருந்து மட்டும் இறக்குமதி செய்யப்பட்ட இறால்களின் அளவு 2,48,127 டன்னாகும். அதாவது, அமெரிக்காவின் ஒட்டுமொத்த இறால் இறக்குமதியில் இந்தியாவின் பங்களிப்பு 36 சதவிகிதமாக இருக்கிறது. 1,32,344 டன் அளவிலான இறால்களை இந்தோனேசியாவிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் 2018ஆம் ஆண்டில் 15.6 சதவிகிதம் கூடுதலான அளவில் இறால்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

டிசம்பர் மாதத்தில் மட்டும் 21,913 டன் அளவிலான இறால்களை அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்திருந்தது. எனினும், இந்த ஆண்டில் சர்வதேச நாடுகளின் போட்டி அதிகரித்துள்ளதால் இந்தியாவின் இறால் ஏற்றுமதியில் பின்னடைவு ஏற்படும் என்று *இக்ரா* நிறுவனம் தனது ஆய்வில் கணித்துள்ளது. இறால் ஏற்றுமதியில் பின்னடைவு ஏற்பட்டாலும், ஒட்டுமொத்த கடல் உணவுகள் ஏற்றுமதி வாய்ப்பு இந்தியாவுக்குப் பிரகாசமாகவே உள்ளது. 2017-18 நிதியாண்டில் இந்தியா 7.08 பில்லியன் டாலர் மதிப்புக்குக் கடல் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. இந்த விவரங்களைக் கடல் உணவுகள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share