mஅமிதாப்புக்கு அமெரிக்கா கொடுத்த விருது!

Published On:

| By Balaji

�அமெரிக்கத் தூதரகம், அமிதாப் பச்சனுக்கு சிறந்த தூதுவர் விருதை வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கிடையேயான டி.பி நோய்க்கான தூதுவராக அமிதாப் பச்சன் செயல்பட்டுவருகிறார். அவரது சிறப்பான செயலைப் பாராட்டி இவ்விருதை வழங்கியிருக்கிறது அமெரிக்கத் தூதரகம்.

அமெரிக்க நாடு, டி.பி நோய்க்கான மருந்துகளை அமிதாப் பச்சன் என்ற நட்சத்திரத்தின் மூலமாக இந்தியாவுக்குள் கொண்டுவருகிறது என்றெல்லாம் ஒரு சமயத்தில் பேசப்பட்டது. ஆனால், அனைத்தையும் தாண்டி அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட டி.பி நோய்க்கான மருந்துகளால் இந்திய மக்கள் பலர் பயனடைந்திருக்கின்றனர் என்ற தகவலை ஆதாரத்துடன் 2016இன் தொடக்கத்தில் அறிவித்தபோது அமிதாப் பச்சனின் செயலை அதிகம் பாராட்டினார்கள். அதன்பிறகு தான், கடந்த ஆண்டு **நானும் ஒரு டி.பி நோயாளி** என்ற உண்மையை அமிதாப் பச்சன் பொதுவெளியில் போட்டு உடைத்தார்.

டி.பி. நோயினால் பாதிக்கப்பட்ட அமிதாப் பச்சன், ஓராண்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு அந்நோயிலிருந்து விடுபட்டார். தன்னைப்போலவே பிறரும் பாதிக்கப்படக் கூடாது என்பதால், டி.பி நோய்க்கான மருந்துகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டுவந்தார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share