]தடுப்பூசி கட்டாயம் : உத்தரவு வாபஸ்!

Published On:

| By Balaji

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே அனுமதி என்ற அறிவிப்பைக் கோயில் நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் உருமாறி பரவி வருகிறது. இது பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில் தமிழக அரசு அனைத்து தரப்பினருக்கும் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வாரம்தோறும் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்தியிருக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்தது.

தற்போது, மேற்கண்ட உத்தரவை வாபஸ் பெறுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் குமரதுரை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா மூன்றாவது தொற்று தடுப்பின் ஒரு அங்கமாக மதுரை மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதல் படி 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே நாளை முதல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கோயில் நிர்வாகம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக இந்த உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது. வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share