வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒரு பெண் சிங்கம் மற்றும் ஏழு நெருப்புக் கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து, சென்னையை அடுத்துள்ள அறிஞர் அண்ணா வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த கவிதா என்ற பெண் சிங்கம் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த அக்டோபர் 26ஆம் தேதி உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களில் ஒரே கூண்டில் அடைக்கப்பட்டிருந்த ஏழு நெருப்புக் கோழிகளின் வாயில் இரத்தம் வந்து சரிந்து விழுந்து அடுத்தடுத்து உயிரிழந்தன. இதன் உயிரிழப்புக்கான காரணம் தெரியாததால் குழம்பி போன ஊழியர்கள், நெருப்பு கோழிகளில் உடல்களில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் முடிவுகள் வந்த பின்னரே, நெருப்பு கோழிகளுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரிய வரும். ஏழு நெருப்பு கோழிகள் இறந்ததையடுத்து, அதன் எண்ணிக்கை தற்போது 28 ஆக குறைந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம், கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டு சிங்ககள் இறந்த நிலையில், தற்போது ஒரு சிங்கமும், ஏழு நெருப்பு கோழிகளும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
**-வினிதா**
�,