நிலக்கரி பற்றாக்குறை தகவல்கள் ஆதாரமற்றவை: நிர்மலா சீதாராமன்

Published On:

| By Balaji

நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக பல்வேறு மாநிலங்களும் மத்திய அரசிடம் முறையிட்டது. இந்த நிலையில், நிலக்கரி பற்றாக்குறை என வெளியாகும் தகவல்கள் ஆதாரமற்றவை என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள நிர்மலா சீதாராமன், “இந்தியா ஒரு மின் உபரி நாடு. மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இரண்டு நாட்களுக்கு முன்புதான் நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை இருப்பதாக பரவும் தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றது என்று தெரிவித்தார். அமைச்சரின் அறிக்கையின்படி மின்சாரம் தயாரிக்கும் ஒவ்வொரு நான்கு நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு அந்தந்த ஆலைகளிலேயே உள்ளது. மேலும், நாட்டின் நிலக்கரி விநியோகச் சங்கிலியில் எந்த பாதிப்பும் இல்லை” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் நிலக்கரி இருப்பை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், மாநிலத்தில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்றும் இதனால் மாநிலத்தில் மின்வெட்டு ஏற்படாது என்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் விளக்கம் அளித்திருந்தார்.

**-ராஜ்**

.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share