ரிலாக்ஸ் டைமில் டீ, காபி அருந்துவதற்குப் பதிலாக எளிதாகச் செய்யக்கூடிய இந்த டீயை அருந்தலாம். உட்கார்ந்தபடி பணியாற்றுபவர்களின் மூட்டுவலிகளைக் குறைப்பதற்கு உதவும் இந்த எலுமிச்சை மிளகு மஞ்சள் டீ.
**எப்படிச் செய்வது?**
இரண்டு கப் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் கால் டீஸ்பூன் மிளகுத்தூள், அரை டீஸ்பூன் மஞ்சள் தூளை போட்டு நன்றாக கொதிக்க விடவும். பின்னர் அதை வடிகட்டி அதில் ஒரு எலுமிச்சைப்பழத்தின் சாறு மற்றும் ஒன்றரை டீஸ்பூன் தேன் விட்டு குடிக்கவும்.
**சிறப்பு**
அனைத்து வயதினருக்கும் ஏற்றது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல்கொண்டது.�,