lரக்‌ஷா பந்தன்: பெண்களுக்கு இலவசப் பயணம்!

public

�ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள்நூல் கட்டி கொண்டாடப்படும் விழாதான் ரக்‌ஷா பந்தன். வட இந்தியாவில் இவ்விழா பிரபலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ரக்‌ஷா பந்தன் விழா, நாளை ஆகஸ்ட் 7ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது.

இந்த நிலையில் ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு பெண்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி போக்குவரத்து கழகம் (டிடீசி) வெளியிட்ட அறிக்கையில், ‘ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு, பெண்களுக்கு இலவசப் பேருந்து சேவை வழங்கப்படுகிறது. டெல்லி மற்றும் தலைநகர் மண்டலங்களில், ஏசி மற்றும் ஏசியில்லா பேருந்துகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம். பண்டிகை நாள் என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே, கூடுதல் பேருந்துகளை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் ஆகஸ்ட் 6ஆம் தேதி நள்ளிரவு முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி நள்ளிரவு வரை மாநில அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்ற சிறப்பு சலுகையை யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த நாளில் சமூக விரோத செயல்கள் ஏதேனும் நடக்கிறதா என்பதைக் கண்காணிக்கவும் காவல்துறைக்கு உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *