lஸ்கர்ட் அணியும் பிரியங்கா: பாஜக சர்ச்சை!

public

ஸ்கர்ட் அணிபவர்கள் புடவை அணிந்து கொண்டு கோயிலுக்குச் செல்கின்றனர் என்று பாஜக தலைவர் ஒருவர் பிரியங்கா காந்தியை மறைமுகமாகச் சாடியுள்ளார்.

அரசியலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எந்த அளவுக்கு வலுத்து வருகிறதோ அதே வகையில் அவர்கள் மீதான விமர்சனங்களும் அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது அரசியலில் பெண்கள் அதிகளவு கால் பதிக்கத் தொடங்கியிருக்கின்றனர். அதேசமயத்தில் அவர்கள் மீது அரசியல் கட்சித் தலைவர்கள் பாலியல் ரீதியான கருத்துகளைத் தெரிவிப்பது அதிகரித்து வருகிறது.

ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கவுள்ள மக்களவைத் தேர்தலுக்காக உத்தரப் பிரதேசத்தில் பாஜக சார்பில் பிரசாரம் செய்த உள்ளூர் தலைவர்களுள் ஒருவரான ஜெயகரன் குப்தா கிழக்கு உபி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குறித்து அவதூறாகப் பேசியிருக்கிறார். மீரட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் செய்த அவர், ‘காங்கிரஸ் தலைவர் ஒருவர், நல்ல காலம் (அச்சே தின்) வந்துவிட்டதா என்று நம்மைப் பார்த்து கேள்வி எழுப்புகிறார். ஸ்கர்ட் அணிந்திருப்பவர்கள் எல்லாம் தற்போது புடவை அணிந்து கொண்டு கோயிலுக்குள் சென்றால் எப்படி நல்ல காலம் வரும். கங்கையை புனித நதியாக நினைக்காமல் அதை தவிர்த்தவர்கள் தற்போது அங்கே சென்று வருகின்றனர்’ எனப் பிரியங்கா காந்தியின் கங்கை பிரச்சாரம் தொடர்பாகக் குறிப்பிட்டுச் சாடியிருந்தார்.

இவரின் கருத்துக்குக் கண்டனம் எழுந்த நிலையில் ஜெயகரன் குப்தா, தான் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை என்று விளக்கமளித்திருக்கிறார்.

பிரியங்காவை பாஜகவைச் சேர்ந்தவர்கள் இது போல் விமர்சிப்பது முதல் முறை அல்ல. உத்தரப் பிரதேசத்தில் கிழக்கு பிராந்திய காங்கிரஸ் செயலாளராகப் பிரியங்கா அறிவிக்கப்பட்டது முதல் இதுபோன்ற கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, உபி பாஜக எம்எல்ஏ ஹரீஷ் திரிவேதி, டெல்லியில் இருக்கும் போது பிரியங்கா காந்தி, ஜீன்ஸும் டி-சர்ட்டும் போட்டு கொள்கிறார். உத்தரப் பிரதேச கிராமங்களுக்கு வரும் போது அவர் சேலை கட்டிப் பொட்டு வைத்து கொள்கிறார் என்று தெரிவித்திருந்தார்.

பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா, காங்கிரஸ் சாக்லெட் முகங்களைத் தேர்தலில் களமிறக்கியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

பிகார் மாநில, பொதுச் சுகாதார மற்றும் கட்டமைப்புத் துறை அமைச்சர், வினோத் நாராயண், பிரியங்கா காந்தி மிகவும் அழகானவர். ஆனால் அழகான முகத்தை வைத்திருந்தால் மட்டும் தேர்தலில் வாக்குகளை வெல்ல முடியாது. பிரியங்கா காந்தி அழகாக இருந்தாலும், அவர் அரசியல் ரீதியாக எதுவும் சாதிக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு பிரியங்கா காந்தி மீது பாலியல் ரீதியான விமர்சனங்களை முன் வைத்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்தியப் பிரதேச அமைச்சர் சஜ்ஜன் சிங் வர்மா, பிரியங்கா காந்தி போல அழகானவர்கள் பாஜகவில் இல்லை என்று அவர்கள் வருத்தப்படுகின்றனர். அக்கட்சியில் நடிகை ஹேம மாலினி உள்ளார். அவரை பழைய பாடல்களுக்கு நடனமாட வைத்து பாஜக வாக்கு சேகரிக்கிறது என்று பதில் தெரிவித்திருந்தார்.

காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள மக்கள் குடியரசு கட்சி தலைவர் ஜெய்தீப் கவாதே, அமேதி தொகுதி வேட்பாளரும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இராணி பற்றி மிகவும் அறுவறுக்கத்தக்க வகையில் பேசியதாகக் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.