குறைந்த பட்சக்கூலியில் நான்கில் ஒரு பங்கு பெற்று வறுமையி்ல் வாழ்க்கை நடத்தும் ஒரு விவசாயக்கூலிப்பெண் மோடி ஆட்சியின் கொள்கைகளால் அதிக வருமானம் பெற்றதாக மோசடிப் பிரச்சாரத்தை மேற்கொண்டதை செய்தி ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.
இது தொடர்பாக, தி வயர் என்ற ஆங்கில இணைய தளத்தில், குறைந்த பட்ச கூலியில் நான்கில் ஒரு மடங்கு பெறும் விவசாயக் கூலிப்பெண் தொழிலாளர் மோடி அரசின் கொள்கைகளால் வளமாக வாழ்கிறார் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியானது. அந்த கட்டுரையில் கூறியுள்ளதாவது:
ஜீன் மாதத்தில் சத்தீஸ்கரில் பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளிடம் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக பேசினார். அப்போது அந்த மாநிலத்திலுள்ள கான்ஹாபுரி மாவட்டத்திலுள்ள கான்கர் என்ற கிராமத்திலுள்ள சந்திரமணி கௌசிக் என்ற விவசாயக் கூலிப் பெண் தொழிலாளர் மோடியிடம் பேசினார். அவர் தான் மோடி அரசின் விவசாயக் கொள்கைகளினால் தனது வருமானம் இரு மடங்காக பெருகி விட்டதாக கூறியுள்ளார்..
சத்தீஸ்கரிலுள்ள விவசாயக் கூலிப்பெண்ணை மாதிரியாகக் காட்டி தொழிலாளியின் வருமானம் மோடி அரசின் கொள்கைகளால் இரு மடங்காகப் பெருகியுள்ளது என்று மத்திய அமைச்சர்களான நிர்மலா சீத்தாராமன் ராஜ்யவர்த்தன் வத்தோர் ஆகியோர் தொடர்ந்து ட்விட்டரில் புகழ்ந்து வந்தனர் இதனைத்தொடர்ந்து டைம்ஸ் ஆப் இந்தியா அரசு தரப்பு செய்தி வட்டாரங்கள் என்று கூறி இச்செய்தியை வெளியிட்டது.
மை நேஷன் ரிப்போர்ட் என்ற பாஜக ஆதரவு செய்தி ஊடகத்திலும் இந்த செய்தி வந்துள்ளது அமைச்சர்கள் இருவரும் அந்த ஊடகத்தையும் ஆதாரமாகவும் குறிப்பிட்டனர். மேலும், மோடி அரசின் கொள்கைகளினால் விவசாயிகள் வளர்ச்சி அடைவதை கண்டு சிலர் பொறாமை அடைந்து விமர்சனம் செய்வதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
அந்தப்பெண்,வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக மோடியிடமும் அதைப்படம் பிடித்த ஏபிபி என்ற செய்தி நிறுவனத்திடமும் தான் நாளொன்றுக்கு 700 ரூபாய் சம்பாதிப்பதாக கூறினார். அதன் பிறகு டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட சில செய்தி நாளேடுகள் புலனாய்வில் இறங்கிய போது, பல மாறுபட்ட அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன. செய்தி நிறுவனங்கள் கௌசிக்கிடம் விசாரித்தபோது அவர் தான் மத்திய அரசின் அதிகாரிகள் நிர்பந்தத்தினால்தான் அப்படி கூறியதாக ஒப்புக்கொண்டார். முக்கியமாக தன்னுடன் சேர்ந்துள்ள சுயஉதவிக்குழுவின் உறுப்பினர்கள் மொத்தம் 12 பேருக்கு நாளொன்றுக்கு 700 கிடைப்பதாகவும் அதைப்பிரித்து ஆளுக்கு தலா 58 ரூபாய் எடுத்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார். அதாவது நாளொன்றுக்கு 58 ரூபாய் என்பது அந்த மாநில அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச கூலி நாளொன்றுக்கான 237 ரூபாயில் 4ல் 1 பங்கு ஆகும்.
உலக வங்கி வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் நாளொன்றுக்கு 130 ரூபாய்தான் சம்பாதிக்கிறார்கள் என்று வரையறுத்துள்ளது. அதில் பாதியைத்தான் கௌசிக் கூலியாக பெறுகிறார். மிகவும் வறுமையில் கௌசிக் வாடுகிறார் என்பதே உண்மை. அப்படியானால் கௌசிக்கின் வறுமையை கேலி செய்கிறதா மோடி அரசு என்று புலனாய்வு செய்துள்ள ஊடகங்கள் கேட்டுள்ளன.
�,