Lவிஜய் சேதுபதிக்கு ஜோடி ரெடி!

public

நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு தமிழில் சில ஆண்டுகளாக வாய்ப்புகள் வராமல் போய்விட்ட நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ருதி ஹாசன், 7ஆம் அறிவு போன்ற படங்களால் பிரபலமானார். தற்போது சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார். அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதியுடன் நேர்காணல் நடத்தும் வாய்ப்பு ஸ்ருதி ஹாசனுக்கு கிடைத்தது. தற்போது அவர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேராண்மை, புறம்போக்கு உள்ளிட்டப் படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன்.

7சி எண்டர்டயின்மென்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஆறுமுக குமார் தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘லாபம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜகபதி பாபு வில்லனாக நடிக்கவுள்ளார். ஆறுமுக குமார் ஏற்கெனவே விஜய் சேதுபதி நடித்த ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி நடித்த பேட்ட படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதை எதிர்பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இத்துடன் சிந்துபாத், மாமனிதன் ஆகிய படங்களிலும் விஜய் சேதுபதி கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *