�
வங்கிகளின் அதீத நம்பிக்கையால்தான் வாராக் கடன்களின் மதிப்பு கடுமையாக உயர்ந்துவிட்டதாக ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
வங்கியாளர்களின் அதீத நம்பிக்கை, தீர்மானங்கள் எடுப்பதில் அரசின் வேகக் குறைபாடு, பொருளாதார வளர்ச்சியிலிருந்த மிதமான நிலை போன்றவற்றால் வாராக் கடன்களின் மதிப்பு உயர்ந்துவிட்டதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மதிப்பீடுகள் குழுவின் தலைவரான முரளி மனோகர் ஜோஷிக்கு ரகுராம் ராஜன் வழங்கியுள்ள குறிப்பில், “சந்தேகத்திற்குரிய நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, விசாரணை குறித்த பயம் உள்ளிட்ட பல்வேறு ஆட்சிமுறை பிரச்சினைகளால் டெல்லியில் தீர்மானங்கள் எடுப்பதில் அரசின் வேகம் குறைந்தது. இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இரண்டுக்கும் பொருந்தும்.
பொருளாதார வளர்ச்சி வலுவாக இருந்த 2006-08 காலகட்டத்தில்தான் வாராக் கடன்களின் மதிப்பு பெருமளவில் உயர்ந்தது. மின் நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களும் பட்ஜெட்டுக்குள் சரியான நேரத்தில் முடிக்கப்பட்டன. அந்த நேரத்தில்தான் வங்கிகள் தவறிழைத்துவிட்டன” என்று தெரிவித்துள்ளார்.�,