Lவரதட்சணை: 23710 பேர் உயிரிழப்பு!

Published On:

| By Balaji

வரதட்சணை தடுப்புச் சட்டம் அமலில் இருந்தும், 2014-2016 ஆண்டு காலத்தில் வரதட்சணைக் கொடுமையால் 23 ஆயிரத்து 710 போ் உயிரிழந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

நவீன தொழில்நுட்பத்திலும் அரசியலிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனாலும், வரதட்சணை என்பது இன்னமும் பெண்களைக் காவு வாங்கிக்கொண்டுவருகிறது. வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்திருந்தும், வெளிப்படையாகவே வரதட்சணை வாங்கும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன.

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களால் பெரிய அளவில் வரதட்சணை கொடுக்க முடியாது. இந்தச் சூழ்நிலையைச் சந்திக்கும் பெண்களில் பலர் தற்கொலையை முடிவாக எடுத்துள்ளனர்.

2014 -2016 வரையிலான 3 ஆண்டுகளில் பதிவான வரதட்சணைக் கொடுமை வழக்குகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த விவரத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் 23 ஆயிரத்து 710 போ் உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் 7,766 வரதட்சணை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வரதட்சணைக் கொடுமையால் 7,277 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 218 பேர் உயிரிழந்துள்ளனர்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel