Lமெரினா போராட்ட அனுமதி ரத்து!

Published On:

| By Balaji

மெரினா கடற்கரையில் எந்த விதமான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களையும் அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 3) உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, மெரினாவில் 90 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சென்னை மெரினா கடற்கரையில் காவிரிப் பிரச்சனைக்காக ஒருநாள் போராட்டம் நடத்த கடந்த ஏப்ரல் மாதம் அனுமதி வழங்கினார்.

இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, தொடர்ந்து வழக்கை விசாரித்து வந்தனர்.

இவ்வழக்கில் இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று நீதிபதிகள் சசிதரன், சுப்ரமணியன் அமர்வு தீர்ப்பு வழங்கியது. மெரினாவில் எவ்விதப் போராட்டம் நடத்துவதற்கும் அனுமதி வழங்க முடியாது என்று கூறி, தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகத் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரியே என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share