தமிழகத்தில் முதன்முறையாக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையொன்றில் எட்டு திருநங்கைகள் காவலர்களாகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை காவல் துறையில் திருநங்கைகள் பணி நியமனம் செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழக மருத்துவமனையொன்றில் முதன்முறையாக அவர்களுக்குப் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சீமாங்க் திட்டத்தின் கீழ் 24 மணி நேரமும் இயங்கும் மகப்பேறு பிரிவுக்காக ஒப்பந்த அடிப்படையில் காவலர்களைத் தேர்வு செய்யும் ஏற்பாடுகள் நடைபெற்றன. இதற்காக எட்டு திருநங்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பணியாணை பெற்ற இந்த எட்டு பேரும், நேற்று (ஜூன் 19) சென்னைத் தலைமைச்செயலகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தமிழகச் சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா உட்பட மருத்துவத் துறை அதிகாரிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் உடனிருந்தனர்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: திமுக வேட்பாளர் விஷால்- தேர்தல் ரத்து பின்னணி!](https://minnambalam.com/k/2019/06/19/82)**
**[எடப்பாடி – வேலுமணி இடையே விழுந்த விரிசல்!](https://minnambalam.com/k/2019/06/19/32)**
**[ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!](https://minnambalam.com/k/2019/06/18/51)**
**[தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?](https://minnambalam.com/k/2019/06/19/31)**
**[பிரேமலதா சமரசம் தோல்வி!](https://minnambalam.com/k/2019/06/19/19)**
�,”