lமனித உரிமைப்போராளிகள்: கைது செய்யத் தடை!

Published On:

| By Balaji

4

பீமா-கோரேகான் குண்டு வெடிப்பிலும், மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட மனித உரிமைப் போராளிகளில் கௌதம் நவ்லகா, ஆனந்த் தெல்தும்பே ஆகியோரை நவம்பர் 21 வரை கைது செய்ய மும்பை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 28 ஆம்தேதியன்று பீமா-கோரேகான் வெடிகுண்டு சம்பவத்திலும், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்திலும் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மனித உரிமைப்போராளிகள் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ்,கவிஞர் வரவர ராவ்,கான்சால்வ்ஸ்,அருண் பெராரியா மற்றும் பத்திரிகையாளர் கௌதம் நவ்லகா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

இவர்களில் கௌதம் நவ்லகா வீட்டுக்காவலில் இருந்து கடந்த அக்டோபர் 1 ஆம் தேதியன்று விடுவிக்கப்பட்டார். கவிஞர் வரவர ராவ்வின் வீட்டுக்காவல் 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் வீட்டுக்காவலில் இருந்து போலீஸ் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதில் கடந்த ஆகஸ்ட்28 ஆம் தேதியன்று பேராசிரியர் ஆனந்த் தெல்தும்பேவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் மும்பை உயர் நீதிமன்றம் நவ்லகாவையும் தெல்தும்பேவையும் வரும் நவம்பர் 21 ஆம் தேதி வரை கைது செய்யத் தடை விதித்துள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share