ஜி.வி.பிரகாஷ், சித்தார்த் இணைந்து நடித்துள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.
பிச்சைக்காரன் படத்திற்கு பின் சசி இயக்கியுள்ள படம் சிவப்பு மஞ்சள் பச்சை. ஜி.வி.பிரகாஷ், சித்தார்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ள இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், காஷ்மிரா பர்டேஷி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். சித்தார்த் டிராஃபிக் போலீஸாகவும் ஜி.வி. பிரகாஷ் பைக் ரேஸராகவும் நடித்துள்ளனர். படத்தின் அனைத்துக் கட்டப் பணிகளும் நிறைவடைந்து அடுத்த மாதம் வெளியாக தயாராகவுள்ளது.
சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை படக்குழு ஒவ்வொன்றாக இணையத்தில் வெளியிட்டு வந்தது. இதுவரை ‘ராக்காச்சி ரங்கம்மா’, ‘உசுரே விட்டுப் போயிட்ட’, ‘இதுதான் இதுதான் இதுதான்’, “மயிலாஞ்சியே” என நான்கு பாடல்கள் வெளியாகியிருந்தன. இந்த நான்கு பாடல்களும் காதலை மையப்படுத்தி அமைந்திருந்தன.
இந்நிலையில் இப்படத்தின் இன்னொரு பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘ஆழி சூழ்ந்த உலகிலே’ எனத் தொடங்கும் இப்பாடல் அக்கா தம்பி பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மோகன் ராஜன் எழுதியுள்ள இப்பாடலை ஸ்ரீகாந்த் ஹரிகரண் பாடியுள்ளார். மோகன் ராஜனின் அழகான வரிகளுக்கு ஸ்ரீகாந்த்தின் குரல் மேலும் அழகு சேர்த்துள்ளது.
**“ஆழி சூழ்ந்த உலகிலே யாவும் அழகாச்சே**
**வயதை மீறிய வாழ்விலே சிறு கவிதை உருவாச்சே”**
**“இவன் அண்ணன் பாதி தந்தை மீதி ஆனானே ஆனானே**
**தம்பி என்ற நிலையை கடந்து போனானே போனானே”**
போன்ற வரிகள் தம்பி தன் அக்காவின் மீது வைத்துள்ள அளவு கடந்த பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
[‘ஆழி சூழ்ந்த உலகிலே’](https://www.youtube.com/watch?v=8BUs3iALYZg)
**
மேலும் படிக்க
**
**
[திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/06/08/23)
**
**
[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)
**
**
[நடிகர் சங்கத் தேர்தல்: பின்னணியில் அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/06/08/48)
**
**
[வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!](https://minnambalam.com/k/2019/06/08/15)
**
**
[ராஜ்நாத் சிங் – அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி](https://minnambalam.com/k/2019/06/07/31)
**
�,”