lநெஞ்சே எழு: சாட்சிகளாகும் நாளைய தலைமுறை!

Published On:

| By Balaji

நரேஷ்

அரசியல் இயங்கும் இடத்தில் சண்டையும் சச்சரவுகளும் சூழும். அறம் இருக்கும் இடத்தில் அமைதிதான் இருக்கும். பட்டினம்பாக்கம் கிரவுண்டில் அமைதிதான் சூழ்ந்திருந்தது. 8 ஓவர்களில் 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பட்டினம்பாக்கம் அணி. சேஸிங் என்பதால் ஆட்டம் ஆரம்பித்த கணத்திலிருந்தே தொற்றிக்கொண்டது பதற்றம்.

பட்டினம்பாக்கம் அணியிலிருந்து விக்கெட்டுகள் விழும்போதெல்லாம் சுற்றியிருந்தவர்களிடம் இறுக்கம் காணப்பட்டது. ஏனென்றால், போட்டி நடக்கும் இடமும், விசிலடித்துப் பார்க்கும் மக்களும், நீதி சொல்லும் அம்பயர்களும் பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்தவர்களாதலால், ஏமாற்றுவதற்கு வாய்ப்பிருப்பதாக அனுபவம் சொல்லியிருக்கிறது. பட்டினம்பாக்கம் அணியின் கோச் கலைசெல்வனே இந்தச் சாத்தியக்கூறுகளை ஒப்புக்கொண்டார். ஏமாற்றுவதற்கும், ஏமாற்றப்படுவதற்கும் ஏக வாய்ப்புகள் இருந்தும் நியாயமாக நடந்து முடிந்தது ஆட்டம். 8 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்து பட்டினம்பாக்கத்தினர் தோல்வியைத் தழுவினர்.

நொச்சிக்குப்பத்தினருக்கோ இது வரலாற்று வெற்றி. ஓர் அணியினரை அவர்களின் சொந்த மண்ணிலேயே வீழ்த்திய குஷியில் குதித்துக்கொண்டிருந்தார்கள் அவர்கள். இதில் ஆச்சரியமான விஷயம், அவர்களின் வெற்றியை பட்டினம்பாக்கத்தினர் ரசித்ததுதான். இவ்விடங்களில் இரு அணியினருக்குள் நடக்கும் போட்டி என்பது இந்தியா – பாகிஸ்தானுக்கு நடக்கும் போட்டி போல அம்மக்களின் மானப் பிரச்சினையாகக் கருதப்படுவது. இதை விருது வழங்கும் விழாவில் திரு.பூச்சி முருகன் அவர்கள் குறிப்பிடும்போது, “இப்படியொரு போட்டி நடந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் அடிக்கடி இங்கே புட்பால் போட்டி நடந்து பாத்திருக்கேன். ஆனா கிரிக்கெட்லேயும் இவ்வளவு பெரிய வீரர்கள் இங்கே இருக்காங்கங்கிறது இப்போதான் தெரியுது. நாம ரொம்ப நீட்டா, டீசண்டா இந்தப் போட்டியை நடத்தி முடிச்சிருக்கோம். அதாவது எந்த சண்டை சச்சரவும் இல்லாம இந்த இடத்துல போட்டியை நடத்தி முடிச்சதுதான் நம்ம முதல் வெற்றி. இந்த மக்களோட மக்களாக இந்தப் பகுதியிலேயே வசிக்கிறவன்தான் நானும். பேரறிஞர் அண்ணா சொன்னதைப்போல, “நாம் அனைவரும் ஒரே குடும்பத்தில் பிறக்க முடியாது என்பதால் வெவ்வேறு குடும்பத்தில் பிறந்திருக்கிறோம், அவ்வளவுதான்!” என்றவர் ஒரு மிக முக்கியமான விஷயத்தை குறிப்பிடப்போவதாக அறிவித்தார்.

“இங்கே ஒரே ஒரு விஷயம்தான் நான் சொல்லணும்னு ஆசைப்படுறேன். உங்களுக்கு ஓர் அருமையான நபர் கிடைச்சிருக்கார். தயவுசெஞ்சு நீங்க அவரை தவற விட்டுடாதீங்க! வருண் என்ற பெயருடைய அவர் சாதாரண நபர் அல்லர். அவர் உங்களுக்குக் கிடைச்ச வைரம். அந்த வைரத்தை எப்படி பயன்படுத்த முடியுமோ, உங்களோட வளர்ச்சிக்கு அப்படி பயன்படுத்திக்கோங்க! எவ்ளோ பணம் இருந்தாலும், சேவை செய்யறதுக்கு ஒரு மனம் வேணும். அந்த மனம் வருண்கிட்ட இருக்கு. நீங்க உங்களைத் தயார் படுத்திக்கோங்க. வருண் உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாரா இருக்கார். இன்னும் நிறைய செய்வார். இங்கிருந்து கபில்தேவ்களும் டெண்டுல்கர்களும் உருவாகட்டும்” என்று சிலாகித்தார்.

அடுத்ததாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த வைரம் பேசியது. “அனைவருக்கும் வணக்கம். உங்களை இங்கே பார்க்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான்தான் வருண். வருண் அறக்கட்டளை நடத்திட்டு வர்றேன். இந்த அறக்கட்டளை சார்பா விளையாட்டு, கல்வி, திறன் மேம்பாடுன்னு பல விஷயங்கள் செய்ய இருக்கோம். அதற்கு உங்க ஒத்துழைப்பு கண்டிப்பா தேவை. நன்றி!”

செயல்படுபவர்கள் செய்துகொண்டே இருப்பார்கள். பேசமாட்டார்கள். வருண் என்ற வைரமும் பேசவில்லை. என்னவெல்லாம் செய்யப்போகிறார் என்று விரைவில் தெரியும்.

நாம் சாட்சி!

[குப்பம் அல்ல; பதக்கங்களின் பெட்டகம்!](https://minnambalam.com/k/2019/06/12/43)

**விளம்பரக் கட்டுரை**

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**

**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**

**[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)**

**[ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!](https://minnambalam.com/k/2019/06/12/46)**

**[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share