lநகைக் கடன்கள் ரத்தா? கைவிரித்த அமைச்சர்!

Published On:

| By Balaji

நகைக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு வாய்ப்பில்லை என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “கூட்டுறவு மற்றும் பொதுத் துறை வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற 5 சவரன் வரையிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இது திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இணைக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார். மக்களவைத் தேர்தலில் திமுக 37 இடங்களில் வென்ற நிலையில், இடைத் தேர்தலில் 9 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. இதனால் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலை திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இன்று (ஜூன் 13) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜுவிடம், திமுகவின் வாக்குறுதி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “நகைக் கடன்களை ரத்துசெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை. நகைக் கடன் வாங்கியவர்கள் செலுத்தியே ஆக வேண்டும். ஏனெனில் மக்களின் டெபாசிட் பணத்திலும், நபார்டு வங்கியின் நிதியினைப் பெற்றும் கடன் வழங்கப்படுகிறது. மாநில வங்கியிடமிருந்து மாவட்ட வங்கிக்கு நிதி செல்கிறது. அங்கிருந்து தொடக்கக் கூட்டுறவு வங்கிகளுக்கு நிதியளிக்கப்பட்டு குறைந்த வட்டி விகிதத்தில் மக்களுக்கு கடன் வழங்கப்பட்டுவருகிறது. அரசு நிதியினைக் கொண்டு இது செயல்படுவதில்லை. எனவே கடன் தொகையை செலுத்திதான் ஆக வேண்டும்” என்று விளக்கம் அளித்தார்.

“திமுக ஆட்சிகாலத்தில் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று கூறிவிட்டு, 5363 கோடி மட்டும்தான் தள்ளுபடி செய்தனர். அதிலும் 500 கோடி ரூபாயை பாக்கி வைத்துவிட்டுச் சென்றனர்” என்று குறிப்பிட்டவர், நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு குறித்து ஸ்டாலினிடம்தான் கேட்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை அப்படிப்பட்ட எண்ணம் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[ரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி!](https://minnambalam.com/k/2019/06/13/11)**

**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**

**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**

**[அதிமுகவின் கொங்கு கோட்டை உடைந்தது: ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/06/13/17)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share