lதேர்தல் பிரச்சாரம்: 1.5 லட்சம் கி.மீ. பயணம்!

Published On:

| By Balaji

தேர்தல் பிரச்சாரத்துக்காகப் பிரதமர் நரேந்திர மோடி மொத்தம் 1.5 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளதாகவும், 142 தேர்தல் பிரச்சாரங்களைச் செய்துள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மே 17ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான அமித் ஷா பேசுகையில், “நம் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து மிகவும் கடினமான, மிக நீண்ட தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டது மோடிதான். பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான தேர்தல் பிரச்சாரப் பயணத்தில் மோடி செல்லாத இடமே இல்லை. மார்ச் 10ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு மார்ச் 28ஆம் தேதி மோடி தனது தேர்தல் பயணத்தை மீரட்டில் தொடங்கினார். மொத்தம் 142 பொதுப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனது பிரச்சாரங்களில் சுமார் 1.5 கோடி மக்களிடம் நேரடியாகக் கலந்துரையாடியுள்ளார். 1.5 லட்சம் கிலோ மீட்டர்கள் விமானப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். அதேபோல, நானும் இந்த தேர்தல் பிரச்சாரப் பயணத்தில் 312 தொகுதிகளைப் பார்வையிட்டுள்ளேன். 161 பொதுப் பிரச்சாரங்கள் செய்துள்ளதோடு, 1.58 லட்சம் கிலோ மீட்டர்கள் தூரம் பயணித்துள்ளேன். அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வகையில் நாங்கள் பிரச்சாரம் செய்துள்ளோம். இத்தேர்தலில் கண்டிப்பாகப் பாரதிய ஜனதா கட்சிதான் வெற்றிபெறும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)

**

.

**

[இன அழிப்புப் போரில் இறந்தோருக்கு அஞ்சலி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/24)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share