lதேசிய திறனாய்வுத் தேர்வு : ஹால்டிக்கெட்!

Published On:

| By Balaji

திட்டமிட்டபடி நவம்பர் 4 ஆம் தேதி தேசியத் திறனாய்வுத் தேர்வு நடத்தப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் நேற்று (அக்டோபர் 31) அறிவித்துள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை பெற தேசிய திறனாய்வுத் தேர்வு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நடத்தப்படுகிறது. அதன்படி, நவம்பர் 4 ஆம் தேதி இந்தத் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 14ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் நலன் கருதி விண்ணப்பிக்கும் தேதி 18ஆம் தேதி மாலை வரை நீட்டிக்கப்பட்டது. தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், முதல்வர் மூலம் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். திட்டமிட்டபடி தேர்வுகள் நட்டைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel