Lதிரையில் இணையும் ரியல் ஜோடி!

Published On:

| By Balaji

கபீர் கான் இயக்கி வரும் ’83’ திரைப்படத்தில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக அவரது மனைவி தீபிகா படுகோன் நடிக்கவுள்ளார்.

கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக போட்டியிட்டு கோப்பையை வென்றது. இந்த சாதனையை மையமாக வைத்து 83 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங்கும், கபில்தேவின் மனைவி ரூமி பாட்டியாவாக ரன்வீரின் மனைவி, தீபிகா படுகோனும் நடிக்க இருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, லண்டனில் நடைபெற்றுவருகிறது. இது தொடர்பான புகைப்படங்களை ரன்வீர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இயக்குநர் கபீர் கானுடன் ரன்வீரும், தீபிகாவும் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “என் மனைவியை விட வேறு யாரால் என் மனைவியாக சிறப்பாக நடிக்க முடியும்” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் மொஹிந்தர் அமர்நாத்தாக சாகிப் சலீம், பல்விந்தர் சந்துவாக ஏம்மி விர்க், சுனில் கவாஸ்கராக தாஹிர் ராஜ் பாசின், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக ஜீவா, சயது கிர்மணியாக சாஹில் கட்டர், சந்தீப் பட்டிலாக சிராக் பட்டீல், திலீப் வெங்சர்கராக ஆதிநாத் கோதரே, ரவி சாஸ்திரியாக தைர்ய கர்வா, மதன் லாலாக ஹர்தி சந்து, பி.ஆர்.மன் சிங்காக பங்கஜ் திரிபாதி ஆகியோர் இந்திய அணி வீரர்கள் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் 83 திரைப்படம், அடுத்த ஆண்டு திரைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

**

மேலும் படிக்க

**

**

[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)

**

**

[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)

**

**

[டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!](https://minnambalam.com/k/2019/06/11/65)

**

**

[உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/06/11/55)

**

**

[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share