Lஜி.எஸ்.டி.: 14 மாநிலங்கள் தயார்!

Published On:

| By Balaji

ஜி.எஸ்.டி. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இதுவரையில் இந்தியாவின் 14 மாநிலங்கள் தங்களது மாநில சட்டமன்றங்களில் ஜி.எஸ்.டி. மசோதாவை நிறைவேற்றியுள்ளன.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு நடைமுறையைக் கொண்டுவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டமான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.), வருகிற ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவிருக்கிறது. அதற்கான நான்கு துணை மசோதாக்களும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒவ்வொரு மாநில சட்டமன்றங்களில் இந்த மசோதாவை நிறைவேற்றும் பணி நடந்து வருகிறது. அதன்படி, தெலங்கானா, பீகார், ராஜஸ்தான், ஜார்கண்ட், சட்டிஸ்கர், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், ஹரியானா, கோவா, குஜராத், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், ஆந்திர பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய 14 மாநிலங்கள் ஜி.எஸ்.டி. மசோதாவைத் தங்களது மாநிலச் சட்டமன்றங்களில் நிறைவேற்றியுள்ளன. பிற மாநிலங்களும் இம்மாத இறுதிக்குள் இந்த மசோதாவை நிறைவேற்றிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி. சட்டத்தில் எந்தெந்தப் பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்று, கடந்த மே 4ஆம் தேதி நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வரி அளவுக்கு மே 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்களில் நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்படும். தற்போதைய நிலையில் சேவைகளுக்கு 12% மற்றும் 18% வரியும், சரக்குகளுக்கு (பொருள்) 5%,12%, 18%, 28% மற்றும் 28 சதவிகிதத்தைவிடக் கூடுதல் என ஐந்து வரி அளவுகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel