|
நாடு முழுவதும் இந்த மாதம் 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு ஒற்றை வரிவிதிப்பு முறையை நாடு முழுவதும் கொண்டுவந்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்த வரிவிதிப்புக்குப்பின் கான்டாக்ட் லென்ஸ்கள் விலை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து பாஷ் அண்ட் லோம்ப் ஐ கேர் நிறுவனத்தின் மேலாளர் சஞ்சய் புடானி கூறியுள்ளதாவது: “இந்த வரிவிதிப்பில் கான்டாக்ட் லென்ஸ்களுக்கு 5 சதவிகிதம் வரை கூடுதல் வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல கான்டாக்ட் லென்ஸ் பராமரிக்கும் பொருள்களுக்கு 12 சதவிகிதம் வரை கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கான்டாக்ட் லென்ஸ்கள் 5 சதவிகிதம் முதல் 11 சதவிகிதம் வரை விலை உயர்ந்துள்ளது. தற்போது கான்டாக்ட் லென்ஸ்கள் குறைந்தபட்ச விலையே ரூ.2,000 ஆக அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.டி. அமல்படுத்துவதற்கு முன்னரே ஜூன் மாதத்தில் கான்டாக்ட் லென்ஸ்கள் விற்பனை பெரும் பாதிப்படைந்தது. லென்ஸ் விற்பனை சந்தையில் ஜி.எஸ்.டி-யின் தாக்கத்தை விரைவில் அறிந்துவிட்டோம். இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் நிலைமை சீராகிவிடும் என்று நம்புகிறோம்” என்றார்.�,