�
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் தம்பதியினரில் பாதிக்கப்படும் பெண் குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் ஜீவனாம்சம் கோரலாம் என்று உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்திரவிட்டுள்ளது நேற்று(அக்-31) நீதிமன்றத்தின் இணைய தளத்தில் அந்த உத்தரவானது வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்,நீதிபதிகள் யூயூ.லலித் மற்றும் கேஎம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் குடும்ப வன்முறைச் (பாதுகாப்பு) சட்டம்-2005ன் படி, சட்டப்படி திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் தம்பதியினரில் பெண் பாதிக்கப்பட்டால் அவருக்கு ஜீவனாம்சம் கோரிட உரிமையுண்டு எனத் தெரிவித்து அதற்கான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். உத்தரவானது அமல்படுத்தப்படும் வகையி்ல் நீதிமன்றத்தில் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திருமணம் செய்து கொண்டு வாழும் தம்பதியினரில் மனைவி அல்லது சேர்ந்து வாழும் தம்பதியினரில் பெண் பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டாலும், அது குடும்ப வன்முறையாக இச்சட்டத்தின் கீழ் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.�,