lசென்னை தொழில்முனைவோர்களின் உதவிக்கரம்!

Published On:

| By Balaji

கேரள மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவவும் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கவும் சென்னையைச் சேர்ந்த ஐந்து தொழில்முனைவோர் புதிய இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.

கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். முந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், மீட்புத் துறையினரால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவுவதில் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து பணம், பொருள் மட்டுமல்லாமல் மீட்புப் பணிக்காகப் பலர் உதவி வருகின்றனர். அந்த வகையில் கேரள மக்களுக்கு முக்கியத் தேவையாக உள்ள தங்குமிட வசதியை ஏற்பாடு செய்ய சென்னை தொழில்முனைவோர் ஓர் ஏற்பாட்டைச் செய்துள்ளனர்.

ஐந்து தொழில்முனைவோர்கள் இணைந்து [EachOneHostOne.com](EachOneHostOne.com) என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளனர். இதில் கேரள மக்களுக்கு அடைக்கலம் (தங்குமிடம்) தர விரும்புபவர்கள் தங்களது மொபைல் எண் மற்றும் முகவரி பற்றிய விவரங்களை இந்த இணையதளத்தில் பதிவிட்டால் போதும். உதவி தேவைப்படும் மக்களுக்கு அருகாமையில் இந்தத் தங்குமிட வசதி இருந்தால் அதைப் பொறுத்து அவர்களுக்கான இட வசதி செய்து தரப்படும். இதுகுறித்து இந்த இணையதளத்தைத் தொடங்கியவர்களில் ஒருவரான மகேஷ் கோபாலகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களிடையே பேசுகையில், “கேரள மக்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்த ஒரே வாரத்துக்குள் இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையதளம் கேரளாவுக்கு மட்டுமல்லாமல் வரும் காலங்களில் இதர மாநிலங்களிலும் தொடர்ந்து உதவும் வகையில் செயல்படும்” என்று கூறியுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share