Lசரிவை நோக்கி ஜவுளி ஏற்றுமதி!

Published On:

| By Balaji

r

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 5 சதவிகிதம் வரையில் சரிவைச் சந்திக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2017ஆண்டின் ஜூலை மாதம் முதலே ஐக்கிய அரபு அமீரகம் நாட்டுக்கான இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி மந்தமாகவே இருந்துவருகிறது. இதனால் இந்த நிதியாண்டில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் பின்னடைவு ஏற்படும் என்று *இக்ரா* நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. வியட்நாம், வங்கதேசம் போன்ற நாடுகள் சர்வதேச ஜவுளிச் சந்தையில் இந்தியாவுக்குக் கடுமையான போட்டியை வழங்கி வருவதால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஏற்றுமதி ஓரளவுக்குச் சீராக இருந்தாலும், முந்தைய மாதங்களில் ஏற்பட்ட வீழ்ச்சி நடப்பு நிதியாண்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று இக்ரா கூறுகிறது.

ஜவுளி உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முன்னிலை வகிக்கும் சீனா, சர்வதேசச் சந்தையில் தனது மதிப்பைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. அதேநேரம் இந்தியா தனது வர்த்தக வாய்ப்பை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. மறுபுறம், வங்கதேசம் ஐரோப்பிய யூனியனிலும், வியட்நாம் அமெரிக்காவிலும் தங்களது சந்தை வாய்ப்பைப் பெருக்கி வருகின்றன. ஏற்றுமதியை மேம்படுத்த இந்திய அரசு தரப்பிலிருந்து ஊக்கச் சலுகை உள்ளிட்ட ஆதரவு வழங்கினால்தான் ஜவுளி ஏற்றுமதியை உயர்த்தவும், ஜவுளி ஏற்றுமதியாளர்களைக் காக்கவும் முடியும் என்று இக்ரா நிறுவனம் ஆலோசனை தெரிவித்துள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share