குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நேற்று (நவம்பர் 14) 48 அரசு பள்ளி மாணவர்களை, சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகம் சார்பில் நடிகர் சதீஷ் விமானத்தில் அழைத்து சென்றார்.
சென்னை, மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகத்தின் சார்பில் ஜவகர்லால் நேருவின் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து அனகாபுத்தூர், பொழிச்சலூர், மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் 48 மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சென்னையில் இருந்து திருச்சி, மெரினா கடற்கரை, மாமல்லபுரம், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகள் விமானத்தில் அழைத்து செல்லப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது. விமானம் 16 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து சென்றது. மாணவ-மாணவிகளுடன் விமானத்தில் நடிகர் சதீஷ் பயணம் செய்து அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.
இந்நிகழ்வுக்குப் பின் சதீஷ் செய்தியாளர்களை சந்தித்த போது, “குழந்தைகள் தினத்தன்று, கஷ்டப்படும் பள்ளிகளில் இருந்து குழந்தைகளை அழைத்து ஒரு மணி நேரம் விமானத்தில் சுத்திக் காட்டுவதென்பது மிகப்பெரிய விஷயம். இதற்கு ஏர்போர்ட் அத்தாரிட்டி, இண்டிகோ, ஐஓசி-க்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வில் என்னை அழைத்தது மிக பெரிய பெருமையாக கருதுகிறேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்திருந்த மாணவர்கள் இதில் பங்கேற்றார்கள். நிறைய கேள்விகள் கேட்டார்கள். கீழே எங்க அம்மா தெரிகிறார்கள் என்ற லெவலில் இந்த பயணத்தில் மகிழ்வுற்றார்கள். இவர்களுடனான பயணம் மறக்கமுடியாத தருணம்” என்றார்.
மேலும், நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள திரைப்படத்திற்கு, “மெர்சலா தெறிக்க விடு மச்சி” என்று இயக்குநர் அட்லிக்கு வாழ்த்துக் கூறியுள்ளார் சதீஷ்.
�,”