lகுடிக்க தடை இல்லையா சார்: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

உண்மையிலேயே இவங்களுக்கு போனஸ் வரலையா இல்லை நம்மளை மாதிரி யாரும் கடன் கேட்டுருவோம்னு வரலன்னு மீம் போடுறாங்களான்னு தெரியல. யாரைப் பார்த்தாலும் இதை தான் சொல்றாங்க. அப்புறம் போன் போட்டு எங்கடா இருக்க மாப்ளேன்னு கேட்டா தி.நகர் வந்திருக்கேன்டாங்குறாங்க. வெடி வெடிக்க தடை போட்டவங்க வீட்டுல குழந்தைகளுக்கு மட்டும் துணி எடுத்தா போதும்னு ஒரு வார்த்தை சேர்த்து சொல்லிருக்கலாம். சம்பளம் வந்ததும் தெரியல போனதும் தெரியல. நாலு நாள் கழிச்சு ஓனர் வீட்டு வாடகை கேட்டா என்ன பண்றதுடான்னு கேட்டா, ‘பலகாரத்துல கொஞ்சத்தை கொடுத்துடு குமாரு’ன்னுட்டு போயிட்டான். கடுப்பாகி டிவியை பார்த்தா சாப்பிடும் முன் மோடிக்கு நன்றி சொல்லுங்கன்னு தமிழிசை அக்கா சொல்லிகிட்டு இருந்துச்சு. அப்ப ஆஃப் பண்ணவன் தான் அடுத்து அந்த பக்கம் போகவே இல்லை. அய்யோ இனி சோத்தை பார்க்கும் போதுலாம் அந்த முகம் தானே ஞாபகத்துக்கு வரும்.. அப்டேட்டை பாருங்க, இன்னொரு போனஸ் மீம் வருது என்னனு பார்த்துட்டு வாரேன்.

**@Kozhiyaar**

பரிட்சைக்கு படிக்கிறதுக்கே எழுந்திருக்காத எங்களை, பட்டாசு வைக்கிறதுக்காக அலாரம் வைத்து எழுந்திருக்க வச்சுட்டாங்களே!??

**@Annaiinpillai**

ஸ்கூல் கட் அடிக்க பிள்ளைகள் நடிக்கும் நடிப்புக்கு ஆஸ்கர் கொடுக்கலாம்!

**@Thaadikkaran**

வெடிக்க தடைன்னு போட்டதுக்கு குடிக்க தடைன்னு போட்டிருந்தா பல குடும்பம் இந்நேரம் சிறப்பான தீபாவளியை கொண்டாட வழி வகுத்திருக்கும்..!!

**@ItsJokker**

மோடி: இந்தா பட்டேல் சிலை திறந்தாச்சு, அடுத்து சிவாஜிக்கு சிலை, புல்லட் ட்ரெயின்னு நிறையா இருக்கு. எல்லாத்தையும் என்ஜாய் பண்ணு.

3 வேளை திங்க சோறு கிடைக்கான்னு நானும் கேட்கமாட்டேன், பொருளாதாரத்த பத்தி நீயும் பேசக்கூடாது.

**@gips_twitz**

இவன் ஒருத்தன் தான் எல்லா ஊர் பஞ்சாயத்துக்கும் வந்துறான்ங்குற மாதிரி

எல்லா பண்டிகையிலயும் இந்த ஆஃபர் இருக்கும் ‘குலோப் ஜாமுன் மிக்ஸ் ஒரு பாக்கெட் வாங்கினா ஒரு பாக்கெட் ஃப்ரீ’ .

**@Kozhiyaar**

வானுயர சிலை எழுப்பி, அதை அண்ணாந்து பார்க்க வைத்து கோவணத்தை உருவிக் கொண்டிருக்கிறார்கள்!!!

**@SubashiniBA**

கொசுக்கள் பெருக காரணமாக இருந்தால் 1 லட்சம் அபராதம் – செய்தி

அப்படி எங்க ஊரில் குடி தண்ணீர் தொட்டி கழுவி 15வருடம் ஆச்சு இதுக்கும் எதாவது நடவடிக்கை எடுங்கள் ஐயா…

**@Thaadikkaran**

‘‘மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுங்கள் அல்லது பதவி விலகுங்கள்’’ – உர்ஜித் படேலுக்கு ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை# டைவர்ஸ் கேசுக்கு போன புருஷன் பொண்டாட்டிகிட்ட சொல்ற மாதிரி சொல்றாப்புல..!!

**@ameerfaj**

ஒரு காலத்தில ஏதாவது விசேஷம்னா ‘ஸ்வீட்’ எங்க’னு கேப்பாங்க..

இப்பல்லாம் ‘ட்ரீட்’ எங்க’னு கேக்குறாங்க..!!

**@iam_susi**

நரேந்திர மோடியின் மத்திய ஆட்சியில், வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது படேல் சிலை மட்டும் அல்ல..

பெட்ரோல், டீசல் , சமையல் எரிவாயு விலையும் தான்…..

**@parveenyunus**

காய்ச்சல் வந்தால், எக்காரணம் கொண்டும் அலட்சியமாக இருக்காமல், மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் – விஜயபாஸ்கர்

# ரெய்டு வந்தா..?

**@Akku_Twitz**

காலையில் சாப்பிடும் முன் மோடிக்கு நன்றி சொல்லுங்கள்- தமிழிசை

ஒருவேளை சாப்பாடாவது சாப்பிட விட்டுவெச்சிருக்கியே தலைவா நன்றி

**@Kozhiyaar**

கடையில பொம்மைக்கு போட்டிருக்கும் உடை நமக்கு நல்லா இருக்கும்னு எடுத்துட்டு வந்தா, நாம அந்த பொம்மையை விட கேவலமா தெரிவோம்!!!

**@rahimgazali**

காசு கொடுது வெடி வாங்கியது வேண்டுமானால் நாமாக இருக்கலாம். ஆனால் வெடிச்சத்தம் எல்லோருக்கும்தான் சொந்தம்.

**@kathir_twits**

திமுகவுடன் பாஜவுக்கு பங்காளிச் சண்டை இல்லை – பொன்.ராதாகிருஷ்ணன்

நோட்டாவுக்கும் பிஜேபிக்கும் தான் பங்காளி சண்டை !!

**@rahimgazali**

காலையில் சாப்பிடும் முன் மோடிக்கு நன்றி சொல்லுங்கள்- தமிழிசை

அப்படின்னா…மதியம் சாப்பிடும் முன் அமீத்சாவுக்கு நன்றி சொல்லணுமா மேடம்?!

**@NagoreJalal**

பட்டேல் இரும்பு மனிதர்ங்குறதுனால சிலையை இரும்புல செய்தார்களாம் .

அப்போ பெண்கள் கரும்பை போன்றவர்கள்ன்னு அக்கா தமிழிசை சொன்னிச்சு.. அதுனால அக்காவுக்கு சிலை செஞ்சீங்கன்னா கரும்புல செய்வீங்களா

**@sundartsp**

கல்யாணத்துக்கு வரல காது குத்துக்கு வரல என்ற வரிசையிலே என் பேஸ்புக் ஸ்டேடசுக்கு லைக் போடலை கூட சேர்த்துடாங்க சொந்தகாரங்க.

**@Kozhiyaar**

மகளுக்கு நகம் கடிக்கும் பழக்கம் எப்படி வந்திருக்கும் என்று நகம் கடித்துக் கொண்டே யோசித்துக் கொண்டிருக்கிறேன்!!

**@Annaiinpillai**

சென்னையில் குளம், குட்டைகள் இல்லாத குறையை மழை நேரங்களில் உள்ள ரோட்டோர பள்ளங்கள் தீர்த்து விடுகிறது!

**@Thaadikkaran**

இங்கிட்டு ஒருத்தன் குறுகுறுன்னு மொபைல் பார்த்திட்டு இருந்தான், என்னடா ஆச்சுன்னு கேட்டேன். சேலரி கிரேடிடெட்னு பேங்க்ல இருந்து மெயில் வந்துச்சு நான் திரும்ப போனஸ் எப்போ வரும்னு கேட்டு ரிப்ளை பண்ணி இருக்கேன்னு சிரிக்காம சொல்றான். இவிங்கள வச்சுக்கிட்டு..

**@nandhu_twitts**

தீபாவளிக்கு அடுத்த நாளே கம்பெணில மன்த்லி மீட்டிங்க் வச்சிருக்காங்க..

செவ்வாய்க்கிழமை நான் வெடிப்பேன், புதன்கிழமை அவங்க வெடிப்பாங்க அவ்ளோதான்ங்க வித்தியாசம்..!!

**@rahimgazali**

தினகரனுக்கு கொள்கை கிடையாது. – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

அப்படியே நமக்கு என்ன கொள்கைன்னும் சொல்லிடுங்களேன்…

-லாக் ஆஃப்�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share