Lகிரண் பேடியின் திடீர் சோதனை!

public

பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமாகப் புதுச்சேரி உள்ளதா என்பது தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

புதுவையின் துணைநிலை ஆளுநராக கிரண் பேடி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி என்ற வகையில் காவல் துறையினருக்குப் பல்வேறு அறிவுரைகளைத் தெரிவித்துவருகிறார்.

புதுவை, இரவில் பொதுமக்களுக்கும், பெண்களுக்கும் எந்த அளவுக்குப் பாதுகாப்பு உள்ளது என்பதை அறிய கிரண் பேடி முடிவு செய்தார். இதையடுத்து, நேற்று நள்ளிரவு 11.30 மணி அளவில் ஆளுநர் மாளிகையைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவருடன் ஆளுநர் கிரண் பேடி, தான் யார் என்று பொதுமக்களுக்கு தெரியாத வகையில் தலையில் முக்காடு அணிந்து ஸ்கூட்டரில் நகர்வலம் வந்தார். புதுவையின் பிரதான சாலைகளிலும், சிறிய சாலைகளிலும் ஸ்கூட்டரில் சென்று சுற்றிப் பார்த்தார். சுமார் ஒரு மணி நேரம் நகரத்தைச் சுற்றிப் பார்த்த அவர், பின்னர் ஆளுநர் மாளிகைக்கு திரும்பிச் சென்றுள்ளார்.

இது தொடர்பாக கிரண் பேடி தனது கருத்தை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: புதுவையில் பொதுமக்களுக்கு இரவில் தகுந்த பாதுகாப்பு உள்ளது. பெண்களுக்கும் உரிய பாதுகாப்பு கிடைக்கிறது. இருப்பினும் போலீசார் கூடுதலாக ரோந்துப் பணியை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளையும், உத்தரவுகளையும் வழங்கி உள்ளேன். எந்தப் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்பதையும் அடையாளம் கண்டுகொண்டோம் என்று தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *