ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த நாளில் காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் வழங்கியும், வெளியே சென்றும் கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு காதலர் தினத்தன்று மகா சிவராத்திரியும் வருகிறது.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் லக்னோ பல்கலைக்கழக வளாகத்தில், காதலர் தினத்தன்று ஜோடி ஜோடியாக உள்ளே சுற்றக் கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்தில் எந்த வித கொண்டாட்டமும் இருக்கக் கூடாது என்றும், இந்த விதிமுறைகளை மீறும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதே நாளில் வரும் மகா சிவராத்திரிக்கு பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் பிப்ரவரி 14ஆம் தேதியன்று எந்தத் தேர்வும் அல்லது கூடுதல் வகுப்பும் நடத்தக் கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே பல்கலைக்கழகம் முழுமையாக மூடப்படும்.
அந்த நாளில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் நுழைய அனுமதி இல்லை. பெண்களைக் கிண்டல் செய்யக் கூடாது, கட்டாயப்படுத்தி பரிசு கொடுக்கக் கூடாது. மாணவர்களைக் கல்லூரிக்கு வராமல் பார்த்துக்கொள்வது பெற்றோர்களின் கடமை” என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
�,”