லாரன்ஸ் இயக்கும் லஷ்மி பாம் படத்தில் அக்ஷய் குமாருக்கு வில்லனாக காஞ்சனா 3 பட வில்லன் நடிக்கிறார்.
முனி 2: காஞ்சனா 3 படத்தின் இந்தி ரீமேக் லஷ்மி பாம். தமிழில் இந்தப் படத்தை இயக்கி நடித்த ராகவா லாரன்ஸ், இந்தியில் இயக்கவுள்ளார். லாரன்ஸ் பாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். நாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது லாரன்ஸிடம் கேட்காமலேயே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டதால் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பின், படக்குழு நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதானமாகி மீண்டும் இயக்கத் தொடங்கினார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் மும்பையில் நடைபெற்றுவரும் நிலையில், அக்ஷய் குமாருக்கு வில்லனாக நடிக்க தருண் அரோரா ஒப்பந்தமாகியுள்ளார். முனி 2 படத்தில் எம்.எல்.ஏ சங்கர் என்ற வில்லன் பாத்திரத்தில் இவர் நடிக்கவுள்ளார். தருண் அரோரா சமீபத்தில் வெளியான காஞ்சனா மூன்றாம் பாகத்திலும் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதர்வா நடிப்பில் வெளியான கணிதன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் இவர்.
தருண் அரோரா தற்போது மலையாளத்தில் உருவாகிவரும் மம்முட்டியின் மாமாங்கம் என்ற வரலாற்றுப் படத்திலும் நடித்துள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
�,”