lகட்சித் தலைவர் மகன் மீது பாலியல் புகார்!

public

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவரைப் பாலியல் வல்லுறவு செய்ததாக, கேரள மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினோய் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை மீரா சாலையில் வசித்து வரும் 33 வயது பெண் ஒருவர், கடந்த வாரம் ஓஷிவாரா போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், பினோய் என்பவர் தன்னைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதாகக் குறிப்பிட்டிருந்தார். கடந்த 13ஆம் தேதியன்று இந்த புகார் மீதான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பினோய், கேரளாவில் ஆளும் கட்சியாக இருந்துவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவரான கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் ஆவார். 2009ஆம் ஆண்டு துபாய் ஹோட்டலொன்றில் தான் டான்சராக பணியாற்றியதாகவும், அப்போது தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து பினோய் ஏமாற்றியதாகவும், தங்களது உறவின் மூலமாக 8 வயது ஆண் குழந்தை உள்ளது என்றும் அவர் தன் புகாரில் தெரிவித்துள்ளார்.

துபாயில் தன்னையும் குழந்தையையும் கவனித்துக்கொண்ட பினோய், மும்பையில் தனியாக வீடு பார்த்து அழைத்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். “வாடகை மற்றும் செலவுக்குத் தேவையான பணத்தை அவர் தொடர்ந்து அளித்து வந்தார். ஆனால் இருவருக்குமான உறவைச் சட்டப்பூர்வமாக்குமாறு வற்புறுத்தினேன். அந்த காரணத்தால், தன்னையும் மகனையும் நிராதரவாக விட்டுவிட்டார். அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் மனைவி, குழந்தை மற்றும் பெற்றோருடன் இருக்கும் புகைப்படம் கண்டு அதிர்ச்சியடைந்தேன்” என்று அந்த பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் பினோய் மீது வல்லுறவு, ஏமாற்றுதல், நேர்மையற்ற தன்மை, சொத்துகளை ஒப்படைக்கத் தூண்டுதல், உள்நோக்கத்துடன் சீண்டுதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு துபாயில் ரியல் எஸ்டேட் தொழிலில் மோசடி செய்ததாக பினோய் மீது ஒரு தொழிலதிபர் குற்றம்சாட்டினார். ஆனால், நீதியமைப்புக்கு வெளியே அந்த வழக்கு பேசித் தீர்க்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது பினோய் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தது பூதாகரமாகியுள்ளது.

இந்த புகார் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய பினோய், அந்த பெண் ஏற்கனவே 5 கோடி ரூபாய் கேட்டுத் தன்னை மிரட்டியதாகவும், அது பற்றி கண்ணூர் போலீசாரிடம் தான் புகார் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!](https://minnambalam.com/k/2019/06/18/51)**

**[டிஜிட்டல் திண்ணை : திமுக- காங்கிரஸ் இழுபறி! களமிறங்கிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/17/70)**

**[ரஞ்சித் குடும்பப் புகைப்படம்: ஹெச்.ராஜா மீது டிஜிபியிடம் புகார்!](https://minnambalam.com/k/2019/06/18/29)**

**[வாழ்க பெரியார், வந்தே மாதரம்: தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு சுவாரசியங்கள்!](https://minnambalam.com/k/2019/06/18/59)**

**[உதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்?](https://minnambalam.com/k/2019/06/17/69)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *