1
மிகப் பெரிய நிதி மோசடியைச் சந்தித்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாராக் கடன் ஜூலை மாதத்தில் 1.8 சதவிகிதம் அளவுக்குக் குறைந்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி மோசடி செய்த விவகாரத்தில் அவ்வங்கி மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது. மேலும் வாராக் கடன் பிரச்சினைகளாலும் அவ்வங்கி தவித்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் அவ்வங்கியின் வாடிக்கையாளர்களிடையே வங்கி மீதான நம்பிக்கை குறைந்துவந்தது. இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி தனது கடன் சுமையைக் குறைத்துள்ளது. திறனிருந்தும் திருப்பிச் செலுத்தாத மிகப் பெரிய கடனாளிகளின் கடன் தொகை ஜூலை மாதத்தில் 1.8 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது, ரூ.25 லட்சத்துக்கும் மேல் கடன் பெற்ற மிகப் பெரிய கடனாளிகளின் மொத்தக் கடன் மதிப்பு ஜூன் மாத இறுதியில் ரூ.15,355 கோடியாக இருந்தது. அது ஜூலை மாத இறுதியில் ரூ.15,175 கோடியாகக் குறைந்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்றவர்களில் அதிகபட்சமாக, வின்சம் டயமண்ட்ஸ் & ஜூவல்லரி நிறுவனம் ரூ.899.70 கோடியும், ஃபாரவெர் பிரீசியஸ் ஜூவல்லரி & டயமண்ட்ஸ் நிறுவனம் ரூ.747.97 கோடியும், ஷூன் டெவலப்பர்ஸ் நிறுவனம் ரூ.410.18 கோடியும், ஸ்ரீ சித்பலி இஸ்பாட் நிறுவனம் ரூ.165.98 கோடியும், ரேம்சரப் நிர்மான் வயர்ஸ் நிறுவனம் ரூ.148.10 கோடியும், எஸ்.குமார் நேஷன்வொய்டு நிறுவனம் ரூ.146.82 கோடியும் கடன் பாக்கி வைத்துள்ளன.�,