Lஐபிஎல்: வென்றெடுத்த இளம்படை!

public

புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணி இரண்டாம் இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தோற்கடித்தது. டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று (மே 18) நடைபெற்ற இந்த ஆட்டம் டெல்லி அணியின் இளம் வீரர்களின் திறமையை வெளிச்சமிட்டுக் காட்டியது.

**இரு அணிகளின் மாற்றங்கள்**

இனி வரும் போட்டிகளின் முடிவுகள் புள்ளிப்பட்டியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த போவதில்லை என்ற மனநிலையில் உள்ளதுபோல் டெல்லி அணி நேற்றைய போட்டியில் மூன்று வெளிநாட்டு வீரர்களை மட்டுமே கொண்டு களமிறங்கியது. அந்த அணியின் ஜேசன் ராய், ஜூனியர் டாலாவுக்குப் பதில் மேக்ஸ்வெல், அவேஷ் கான் இடம்பிடித்திருந்தனர். சென்னை அணியில் டேவிட் வில்லிக்குப் பதில் லுங்கி நிகிடி இடம்பிடித்திருந்தார்.

டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்து வீச்சைத் தேர்வு செய்தார். முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிஷப் பந்த் 38 ரன்களும், விஜய் ஷங்கர், ஹர்ஷல் படேல் தலா 36 ரன்களும் எடுத்தனர்.

பலமான பேட்டிங் வரிசையைக் கொண்டு எளிய இலக்கைத் துரத்திய சென்னை அணி, டெல்லியின் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறியது. 23 பந்துகளைச் சந்தித்த ஷேன் வாட்சன் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். வழக்கமான அதிரடி பாணி ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடு 29 பந்துகளில் அரை சதம் கடந்து ஹர்ஷல் படேல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து வந்த ரெய்னா (17), சாம் பில்லிங்ஸ் (1), தோனி (17), பிராவோ (1) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் சென்னை அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஜடேஜா 18 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தப் போட்டியின் முடிவுகள் இரு அணிகளுக்கும் புள்ளிப் பட்டியலில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், சென்னை அணி தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இருப்பதற்கான வாய்ப்பில் சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

**பந்த் Vs லுங்கி**

இந்த சீசனில் டெல்லி அணியின் ரிஷப் பந்த், சென்னையுடன் விளையாடிய இரு போட்டிகளிலும் லுங்கி நிகிடியின் பந்து வீச்சிலேயே ஆட்டமிழந்துள்ளார்.

**தோனியின் தீவிர ரசிகர்**

பெரும்பாலும் சென்னை விளையாடுகிற எல்லாப் போட்டிகளிலும் இவரைக் காணலாம். தோனியின் தீவிர ரசிகராக சரவணன் ஹரி, நேற்றைய போட்டி தொடங்குவதற்கு முன்பு மஞ்சள் வண்ணம் பூசி ஆட்டத்தைக் காணத் தயாராகிக் கொண்டிருந்த காட்சி.

**டெல்லியின் வெற்றி விவரம்**

டெல்லி அணி இந்த சீசனில் இதுவரை நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணி வென்றுள்ள அணிகளின் விவரம்:

*மும்பை – மூன்று முறை சாம்பியன்*

*கொல்கத்தா – இரண்டு முறை சாம்பியன்*

*சென்னை – இரண்டு முறை சாம்பியன்*

*ராஜஸ்தான் – முதலாம் ஆண்டு ஐபிஎல் சாம்பியன்*

**’நோ பால்’ இல்லா சிஎஸ்கே**

இந்த சீசனில் இதுவரை ஒரு நோ பால்கூட வீசாத அணி என்ற பெருமையைச் சென்னை அணி மட்டுமே பெற்றுள்ளது.

**ராயுடுவின் 3,000**

ராயுடு நேற்றைய போட்டியில் 50 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் தனது 3,000 ரன்களைக் கடந்தார்.

**டெல்லியின் இளம் படை**

நேற்றைய போட்டியில் மூன்று வெளிநாட்டு வீரர்களை மட்டுமே கொண்டு இளம் படையுடன் களமிறங்கிய டெல்லி அணி, 34 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி அசத்தியுள்ளது.

**சந்தீப்புக்கு ஆலோசனை வழங்கிய தாகிர்**

நேற்றைய போட்டி முடிந்த பின்னர் சென்னை அணியின் லெக் ஸ்பின்னர் இம்ரான் தாகிர் டெல்லி அணியின் சந்தீப் லாமிச்சானேவுக்கு ஆலோசனை வழங்கிய காட்சி.

**- முத்துப்பாண்டி யோகானந்த்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *