சென்னை-சேலம் இடையேயான எட்டுவழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி சேலத்தில் நடந்த அதிமுக கூட்டணியின் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ‘ நீதிமன்றம் தடை விதித்தாலும், விவசாயிகளுடன் பேச்சு நடத்தி அந்தத் திட்டம் குறித்த காலத்துக்குள் நிறைவேற்றப்படும்” என்று பேசினார்.
இது கடுமையான சர்ச்சையை உண்டாக்கிய நிலையில், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. தேர்தல் முடிந்துள்ள நிலையில் எட்டுவழிச் சாலை அமைக்கப்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
சேலம் விமான நிலையத்தில் இன்று (மே 20) செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “விவசாயிகளை பாதிக்கக் கூடிய எந்தவொரு திட்டத்தையும் தமிழகத்தில் அதிமுக அரசு அனுமதிக்காது” என்று தெரிவித்தார்.
இதனை எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கும் எடுத்துக்கொள்ளலாமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “அது எப்படி விவசாயிகளை பாதிக்கிறது என்று எடுத்துக்கொள்கிறீர்கள்? சாலைகள் இல்லாமல் எப்படி பயணம் செய்ய முடியும். திமுக ஆட்சியில் 786 கிலோ மீட்டர் சாலைகள் அமைத்தனர். அப்போது விவசாயிகள் யாரும் பாதிக்கப்படவில்லையா? அந்தந்த காலகட்டத்திற்கு தக்கவாறு சாலைகள் அமைத்தால்தான் விபத்துக்களை குறைக்க முடியும். மேலும் தொழில் வளர்ச்சிக்கு சாலைகள் மிகவும் அவசியம்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து, “முன்பு ஒரு லட்சம் வாகனங்கள் சென்றுகொண்டிருந்த சாலையில் தற்போது 4 லட்சம் வாகனங்கள் செல்கின்றன. அதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் உண்டாகின்றன. அந்த சாலைகள் அமைக்கப்படுவதற்கு எப்படியும் 5 வருடங்கள் ஆகிவிடும். அப்போது வாகனங்களின் எண்ணிக்கை 6 லட்சம் ஆகிவிடும். இவற்றை கருத்தில்கொண்டு மக்களின் நன்மைக்காகவே சாலைகளை அமைக்கிறோம். எட்டுவழிச் சாலைக்கு 7 சதவிகிதம் பேர்தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நாட்டுநலன் கருதி தாமாக முன்வந்து நிலங்களை அளிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
சாலை போடுகிறோம் என்ற பெயரில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மூங்கில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன, பசுமையை அழிக்கிறார்கள் என்பதுதான் மக்களின் குற்றச்சாட்டாகவே உள்ளது என்ற கேள்விக்கு, “இவை அனைத்துமே நாம் நட்டதுதான். அனைத்தையும் மீண்டும் உருவாக்க முடியும். மனிதர்கள் நினைத்தால் உருவாக்க முடியாதது எதுவும் இல்லை. ஆனால் உயிர்போனால் வராது. தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு சாலைகள் அமைக்க வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு. மக்கள் நினைப்பதைத்தான் அரசு செயல்படுத்தும்” என்று பதிலளித்தார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)
**
.
**
[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)
**
.
**
[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)
**
.
**
[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)
**
.
.�,”