lஉலகக் கோப்பை: நியூசிலாந்து நிதான ஆட்டம்!

Published On:

| By Balaji

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 45 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்துள்ளது.

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டியில் இன்று (ஜூலை 14) இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து ஆணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக மார்ட்டின் கப்திலும் ஹென்றி நிக்கோல்ஸும் களமிறங்கினர். 6 ஓவர்களில் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் 19 ரன்களுக்கு எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார் மார்ட்டின் கப்தில். பின்னர் நிக்கோல்ஸுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடினார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்த நிலையில் கேன் வில்லியம்சன் 53 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து லியாம் பிளங்கட் பந்தில் வெளியேறினார்.

சிறிது நேரத்திலேயே அரைசதம் கடந்த நிலையில் நிக்கோல்ஸ் 55 ரன்களில் ஆட்டமிழக்க 118 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது நியூசிலாந்து அணி. இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ராஸ் டெய்லர் இம்முறை சோபிக்கவில்லை. அவர் 15 ரன்களுக்கு வெளியேற, அடுத்ததாகக் களமிறங்கிய ஜேம்ஸ் நீஷமும் 19 ரன்களுக்குப் பெவிலியன் திரும்பினார். அப்போது நியூசிலாந்து அணி 38.6 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்திருந்தது. டாம் லேத்தம் – கோலி டீ கிராண்ட்ஹோம் ஜோடி தொடர்ந்து விளையாடி வருகிறது. லேத்தம் 39 ரன்களுடனும் கிராண்ட்ஹோம் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 45 ஓவர்களில் இங்கிலாந்து அணி 211 ரன்கள் எடுத்துள்ளது.

**

மேலும் படிக்க

**

**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[எம்.எல்.ஏ புகார்: அமைச்சரை எச்சரித்த எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/14/46)**

**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share