Lஇலக்கைத் தாண்டும் வரி வசூல்!

Published On:

| By Balaji

நேரடி வரி வசூல் நடப்பு ஆண்டுக்கான இலக்கைத் தாண்டிவிடும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நேரடி வரி வசூல் ஏற்கெனவே ரூ.5 கோடியைத் தாண்டிவிட்டது. நடப்பு நிதியாண்டில் ரூ.11.5 லட்சம் கோடியை நேரடி வரியாக வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த இலக்கையும் தாண்டி வரி வசூலாகும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவரான சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார். மேலும், சுமார் 2.15 கோடி வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை ரூ.1.15 லட்சம் கோடி மதிப்பிலான ரீஃபண்ட் தொகையை வழங்கியுள்ளதாகவும், இனி நிகர வரி வசூல் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுஷில் சந்திரா நவம்பர் 13ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாங்கள் ஏற்கெனவே ரூ.5 லட்சம் கோடி வரி வசூலைக் கடந்துவிட்டோம். இது நிகர நேரடி வரி வசூல் இலக்கில் 44 விழுக்காடாகும்.

ரீஃபண்ட் தொகை அதிகரித்துள்ள போதிலும் வரி வசூல் அதிகரித்துள்ளது. வரி ரிட்டன் தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் 6.85 கோடி வருமான வரி ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் இதுவரையில் 6.02 கோடி வருமான வரி ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுவரையில் நேரடி வரி வசூலின் நிகர வளர்ச்சி விகிதம் 14.5 விழுக்காடாக இருந்துள்ளது. மொத்த வளர்ச்சி விகிதம் 14.5 விழுக்காடாக இருந்துள்ளது. நாங்கள் 14.55 விழுக்காடு வளர்ச்சியையே எதிர்பார்த்தோம். வரி வசூல் நிச்சயமாக எங்களது இலக்கான ரூ.11.5 லட்சம் கோடியைத் தாண்டிவிடும்” என்று கூறினார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share